ஷாரூக்கானின் 4 கோடி ரூபாய் பஸ்!
Posted Date : 17:07 (04/11/2015)
Last Updated : 17:07 (04/11/2015)
சாதாரணமாக ஒரு காரோ, பைக்கோ நீங்கள் டெலிவரி எடுக்க எத்தனை நாட்கள் ஆகும்? ‘‘புல்லட்டுக்கு வெயிட்டிங் பீரியட் 6 மாசம்’... க்விட் கார் செம டிமாண்ட் சார்... 5 மாசம் ஆகும்!’’ என்று ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட கார்/பைக்கை டெலிவரி கொடுக்கவே மாதக்கணக்கில் நிறுவனங்கள் இழுத்தடிக்கும்போது, அசால்ட்டாக வெறும் 45 நாட்களில் ஒரு காஸ்ட்லி வாகனத்தை புரொடக்ஷன் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்திருக்கிறது ஒரு நிறுவனம்.
 
அந்த நிறுவனம் - DC என்னும் திலீப் சாப்ரியா டிஸைன்ஸ். வாகனத்தின் உரிமையாளர் - பாலிவுட் ‘பாட்ஷா’ நடிகர் ஷாரூக்கான். வாகனம் - ‘வேனிட்டி வேன்’ என்னும் சொகுசு பஸ். 
 
 
 
'இது பழைய நியூஸ்தான்' என்பவர்களுக்கு கொசுறுத் தகவல்! தனது 50-வது பிறந்த நாளின்போது இதை டெலிவரி எடுத்திருக்கிறார் ஷாரூக்!
 
 
 
 
வால்வோ B9R மல்ட்டி ஆக்ஸில் வால்வோ பஸ்ஸை அடிப்படை டிஸைனாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பஸ், 14 மீட்டர் நீளம் கொண்டது. முன் பக்கம் இரண்டு ஸ்பைன்களாகப் பிரிக்கப்பட்டு, LED ஹெட் லேம்ப்ஸ், புதிய பம்ப்பருடன் மிகப் பெரிய விண்ட்ஸ்க்ரீன், ஏர் சஸ்பென்ஷன் என்று செம ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த வேனிட்டி பஸ்.
 
 
 
 
பஸ்ஸின் உள்ளே சென்றால்தான் இதன் மேஜிக் புரியும். பிஸினஸ் க்ளாஸ் டிஸைனில் புதிய கான்ஃபரென்ஸ் ரூம், படுக்கையறை, கழிவறை, கிச்சன், மேக்-அப் ரூம் என்று 280 சதுரஅடிகளுக்கு ஒரு மிகப் பெரிய செவன் ஸ்டார் ஹோட்டலில் தங்கும் எஃபெக்ட் கிடைக்கும். மேலே வுட்டன் சீலீங் ஆம்பியன்ட் லைட்டிங்கில் இரவில் மின்னும்.
 
 
 
 
 
இது தவிர, 3 சாட்டிலைட் டி.வி.கள், 4000 வாட் பாஸ் ஸ்பீக்கர் சிஸ்டம், வைஃபை கனெக்ஷன் என்று ஷாரூக்கானுக்காகவே பார்த்துப் பார்த்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
 
 
 
 
9,000 சிசி, 6 சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின், 340bhp கொண்ட இந்த பஸ்ஸை முழுவதுமாக வடிவமைக்க 45 நாட்கள் ஆனதாம். ‘‘ஷாரூக் என்னிடம் அவர் தேவைகளைச் சொன்னபோது, வால்வோ பஸ்தான் என் நினைவுக்கு வந்தது. 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அதை அப்படியே மாடிஃபை செய்து, அவர் முன் நிறுத்தியபோது, ஷாரூக் ஹேப்பி அண்ணாச்சி!’’ என்கிறார் திலீப் சாப்ரியா.
 
 
 
சர்வீஸுக்கு ஷாரூக்கானை அலைய வெச்சுடாதீங்க திலீப்!
 
- தமிழ்

 

TAGS :