மஹிந்திரா IMPERIO பிக்-அப்: 6.25 லட்சத்தில் அறிமுகம்!
Posted Date : 17:43 (06/01/2016)
Last Updated : 17:43 (06/01/2016)

 

விவசாயிகள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள், பொருட்களை தங்களிடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு எளிதாகக் கொண்டு செல்லும் வகையில், IMPERIO எனும் பிக்-அப் வாகனத்தை இன்று அறிமுகப்படுத்தியது மஹிந்திரா. 70 கோடி முதலீட்டில், சென்னையில் இருக்கும் Mahindra Research Valleyல் இதன் உருவாக்கம் நடைபெற்றிருந்தாலும், சக்கனில் இருக்கும் மஹிந்திராவின் தொழிற்சாலையில்தான்  இந்த பிக்-அப் தயாரிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே விற்பனையில் இருந்த GENIOவிற்கு மாற்றாக இனி  IMPERIO இருக்கும் எனத் தெரிவித்துள்ளது மஹிந்திரா. புதிய கிரில், ஹெட்லைட்ஸ், பானெட், பம்பர் மூலமாக வாகனத்தின் முன்பக்கம் அட்டகாசமாக இருக்கிறது. இரண்டு பாடி ஆப்ஷன்ஸ் [SINGLE CAB & DOUBLE CAB], 3 கலர்கள் [சிவப்பு, நீலம், வெள்ளை], 2 வேரியன்ட் [STD & VX], கேபினில் அதிக சிறப்பம்சங்கள் [16 இன்ச் ட்யூப்லெஸ் டயர்கள், HVAC, பவர் ஸ்டீயரிங் & பவர் விண்டோஸ், கிலெஸ் என்ட்ரி, LSPV ப்ரேக்ஸ், ELR சீட் பெல்ட், 2 DIN மியூசிக் சிஸ்டம், ஸ்டோரேஜ் ஸ்பேஸ்] என ஒரு பிரிமியம் பிக்-அப்பாக IMPERIO வடிவமைக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா கூறியுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் FUEL SMART தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள 2.5லிட்டர் 4 சிலிண்டர் DI CRDE இன்ஜின், 75BHP பவர் - 22KGM டார்க் - 13.55KMPL ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. 1, 240 கிலோ எடையை இழுத்துச் செல்லும் திறன் படைத்த  IMPERIOவின் அதிகபட்ச வேகம் 120கிமீ. 3 வருடம்/1,00,000 கிமீ வாரன்டியுடன் கிடைக்கும்  IMPERIO பிக்-அப்பின் விலைகள் பின்வருமாறு;
 
 
 
 
மஹிந்திரா Imperio BS-III விலை (எக்ஸ் ஷோரும், தானே)
 
* Imperio Single Cab Base – Rs. 6.25 லட்சம்
* Imperio Single Cab VX – Rs. 6.60 லட்சம்
* Imperio Double Cab Base – Rs. 6.60 லட்சம்
* Imperio Double Cab VX – Rs. 7.12 லட்சம்
 
மஹிந்திரா Imperio BS-IV விலை (எக்ஸ் ஷோரும், மும்பை)
 
* Imperio Single Cab Base – Rs. 6.40 லட்சம்
* Imperio Single Cab VX – Rs. 6.75 லட்சம்
* Imperio Double Cab Base – Rs. 6.75 லட்சம்
* Imperio Double Cab VX – Rs. 7.27 லட்சம்
 
TAGS :   MAHINDRA, MRV, CHENNAI, CHAKAN, INDIA, DIESEL, DI CRDE, LSPV, FUEL SMART, PICKUP, CAB, GENIO, IMPERIO.