RUBBERCON 2015: 3 நாள் கருத்தரங்கு தொடங்கியது!

 

 

International Rubber Conference Organisation [IRC] மற்றும் Indian Rubber Institute [IRI] இணைந்து நடத்தும் சர்வதேச கருந்தரங்கான RUBBERCON 2015, தமிழகத்தின் கவர்னர் டாக்டர் கே. ரோசய்யா அவர்கள் சென்னையில் இன்று துவக்கி வைத்தார். அப்போது ரிலையன்ஸ் பெட்ரோ-கெமிக்கல் நிறுவனத்தின் COO, திரு. விபுல் ஷா உடனிருந்தார். Business, Plenary, Technical - Educational Courses என மூன்று செக்‌ஷன்களாக நடக்கும் இந்த கருத்தரங்கு, மூன்று நாட்களுக்கு [மார்ச் 1,2,3] ''Shaping The Future Through Innovative Technology'' எனும் முழக்கத்திற்கு ஏற்ப நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்ட நிலையில், அந்நேரத்தில் சென்னை நகரம் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால், சிறிது காலம் கழித்து தற்போது கருத்தரங்கு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் குழுமம் தவிர, உலகளவில் டயர்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பலவும் இந்த கருத்தரங்கில் பங்கேற்பது இங்கு குறிப்பிடத்தக்கது

 

 

படங்கள்:  பா. காளிமுத்து.