ஶ்ரீசிட்டியில் புதிய தொழிற்சாலையைத் துவங்கியது இசுஸூ !
Posted Date : 12:00 (28/04/2016)
Last Updated : 12:00 (28/04/2016)

 

 

ஜப்பானைச் சேர்ந்த இசுஸூ நிறுவனம், ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஶ்ரீசிட்டியில் தனது புதிய தொழிற்சாலையை நிறுவியுள்ளது. இதனை ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்றுத் தொடங்கி வைத்தார். மேலும் அங்கு உற்பத்தி துவங்கிவிட்டதைக் குறிக்கும் விதமாக, இந்தியாவின் முதல் Adventure Utility வாகனமாக D-Max V-Cross வாகனத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். 107 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த தொழிற்சாலையில், தேவைக்கேற்ப வருடத்திற்கு 50,000 - 1,20,000 வாகனங்கள் வரை உற்பத்தி செய்யக்கூடிய திறன் படைத்தது. இங்கு ஒவ்வொரு 42 நிமிடத்திற்கும் ஒரு புதிய கார் தயாராகும். ஏற்கனவே ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் தொழிற்சாலைகளை வைத்துள்ள இந்நிறுவனம், இந்தியாவில் தனது சந்தை மதிப்பை உயர்த்தும் நோக்கத்தில் இங்கு தொழிற்சாலையை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இசுஸூ தயாரிக்கும் வாகனங்களில், 70 சதவிகிதம் வரை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

 

இந்த எண்ணிக்கை இனி வரும் காலங்களில் உயர்த்தப்பட்டு, மற்ற நாடுகளுக்கும் இங்கிருந்து வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. வாகன உதிரிபாகங்களுக்காக, 120 நிறுவனங்களிடம் கூட்டணி அமைத்திருக்கும் இசுஸூ, D-Max Single Cab, D-Max Crew Cab, D-Max V-Cross, D-Max Cab Chassis எனும் 4 வாகனங்களை, இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய உள்ளது. 2013 ஆண்டு துவங்கி இப்போது வரை தனது MU-7 எஸ்யுவியை, சென்னையில் உள்ள இந்துஸ்தான் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்து, அவற்றை முறையாக அசெம்பிள் செய்து, இந்தியாவெங்கும் விற்பனை செய்துள்ளது இசுஸூ. தமிழகத்தில் 3 டீலர்களைக் (சென்னை, கோவை, மதுரை) கொண்டுள்ள இசுஸூ, இதுவரை 3,000 MU-7 எஸ்யுவிகளை இந்தியாவில் விற்றுள்ளது. உலகளவில் கமர்ஷியல் மற்றும் பாசஞ்சர் வாகன சந்தை அளவு மற்றும் விற்பனையில், இந்தியா 2வது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் வருடத்திற்கு 12.7 சதவிகித வளர்ச்சியையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

 

TAGS :   ISUZU, JAPAN, INDIA, SRICITY, ANDHRA PRADESH, D-MAX, V-CROSS, D-MAX, SINGLE CAB, D-MAX, CREW-CAB, D-MAX, CAB CHASSIS, PICKUP, COMMERCIAL VEHICLES, SUV, DIESEL, 4 CYLINDER ENGINE.