இசுஸு V-Max D-Cross புக்கிங் துவங்கியது: விலை 12.49 லட்சம்!
Posted Date : 21:06 (09/05/2016)
Last Updated : 21:07 (09/05/2016)

 

 

இந்தியாவின் முதல் அட்வென்ச்சர் யுட்டிலிட்டி வாகனமான இசுஸு V-Max D-Cross வாகனத்தை, சென்னை எக்ஸ் ஷோரும் விலையான ரூ. 12.49 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது ஜப்பானைச் சேர்ந்த இசுஸூ நிறுவனம். இந்த வாகனத்தின் புக்கிங் துவங்கிவிட்ட நிலையில், ஜூலை 2016 முதல் டெலிவரிகள் தொடங்கும் என இசுஸூ தெரிவித்துள்ளது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட V-Max D-Cross, ஶ்ரீசிட்டியில் இருக்கும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. செவர்லே ட்ரெயில்ப்ளேஸர் தயாரிக்கப்படும் அதே ப்ளாட்ஃபார்மில் தயாராகும் இசுஸுவின் V-Max D-Cross, உலகளவில் ஆஃப் ரோடிங் மற்றும் அட்வென்ச்சர் பிரியர்களுக்கானச் சிறந்த வாகனமாகத் திகழ்ந்து வருகிறது. iGRIP (Isuzu Gravity Response Intelligent Platform) எனும் தொழில்நுட்பத்தால் காரின் திடமான சேஸி தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே எப்படிப்பட்ட சாலையிலும் (shift-on-fly) உடனான 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட  V-Max D-Cross நிலையாகப் பயணிக்கும் என நம்பலாம்.

 

 

V-Max D-Crossன் வெளிப்புறத்தில் இருக்கும் க்ரோம் கிரில், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ரூஃப் ரெயில், அலாய் வீல்கள், பெரிய வீல் ஆர்ச் ஆகியவை, காருக்கு மாடர்ன்னான தோற்றத்தைத் தருகின்றன. காரின் கேபின் மற்றும் இரட்டை வண்ண டேஷ்போர்டு, ட்ரெயில்ப்ளேஸரை நினைவுபடுத்துகிறது. இங்கு 2+3 இருக்கைகள், ஸ்டீயரிங் விலீல் ஆடியோ கன்ட்ரோல்கள், MID (Multi Information Display), க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, 7 இன்ச் டச் ஸ்கிரின், பவர் விண்டோஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. காரின் பாதுகாப்பிற்காக, 2 காற்றுப்பைகள், ABS, EBD உள்ளன. V-Max D-Crossல் 134bhp பவர் மற்றும் 32kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் பிக்-அப்பான D-MAX Regular Cab வாகனத்தின் புக்கிங்கும் துவங்கியுள்ளது. ஆனால் இதனை கமர்ஷியல் வாகனமாகத் தான் பதிவு செய்ய முடியும். 

 

TAGS :   ISUZU, JAPAN, INDIA, SRICITY, ANDHRA PRADESH, D-MAX, V-CROSS, D-MAX, SINGLE CAB, D-MAX, CREW-CAB, D-MAX, CAB CHASSIS, PICKUP, COMMERCIAL VEHICLES, SUV, DIESEL, 4 CYLINDER ENGINE.