ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது மாருதியின் சூப்பர் கேரி LCV!

 

இந்தியாவில் பாசஞ்சர் வாகனத் தயாரிப்பில் முன்ணனியில் இருக்கும் மாருதி சுஸூகி, தற்போது போட்டி மிகுந்த லைட் கமர்ஷியல் வாகனத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறது. 300 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது மாருதியின் முதல் LCVயான சூப்பர் கேரி (Super Carry). முதற்கட்டமாக லுதியானா, அஹமெதாபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் இதன் விற்பனை, வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்குகிறது.

வெள்ளை மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் சூப்பர் கேரியில், 32bhp பவரையும், 7.5kgm டார்க்கையும், 22.07kmpl மைலேஜையும் வெளிப்படுத்தக்கூடிய 2 சிலிண்டர் 793சிசி டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 80கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த LCV, 740கிலோ எடையை சுமக்கும் திறன்கொண்டது. 2 வருடம்/72,000 கிமீ வாரன்டி கொண்ட சூப்பர் கேரியின் கொல்கத்தா எக்ஸ் ஷோரும் விலை 4.11 லட்சம் ஆகும். தனது LCVகளை விற்பனை செய்வதற்கு பிரத்யேகமான டீலர்ஷிப்களை நிர்ணயித்துள்ளது மாருதி சுஸூகி.