கனரக வாகனங்களுக்கான டயர்களை அறிமுகப்படுத்தியது அப்போலோ!
Posted Date : 17:31 (19/09/2016)
Last Updated : 17:35 (19/09/2016)

 

இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தியாளர்களில் ஒன்றான அப்போலோ டயர்ஸ் நிறுவனம், பஸ் மற்றும் டிரக் போன்ற கனரக வாகனங்களுக்கான டயர் தயாரிப்பில் தன்னை முன்னிலைப்படுத்தும் விதமாக, எண்டியூரேஸ் ஆர்.டி.ஹெச்.டி, எண்டியூமைல் எல்.ஹெச்.டி, எண்டியூகம்ஃபர்ட் சிஏ எனும் மூன்று புதிய டயர்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்ப, புதிய தொழில்நுட்பத் திறன் மற்றும் அதிக ஆற்றல் கொண்டதாக இவை உருவாக்கப்பட்டுள்ளது.

 
இது குறித்து அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தலைவர் சதிஷ் ஷர்மா கூறியதாவது, ''இந்தியாவில் டிரக் மற்றும் பஸ் டயர் பிரிவில் அப்போலோ டயர்ஸின் ஆளுமையை வலுப்படுத்தும் நோக்கில், இந்த புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டிரக் மற்றும் பஸ் பரிவில் மிக தாமதமாக நுழைந்த நிறுவனம் என்றாலும்கூட, எங்கள் தயாரிப்புகள் தொழில்நுட்ப வாயிலாக மேம்பட்டுள்ளதுடன், 360 டிகிரி சர்விஸ் பேக்-அப் மூலமாகவும், இந்தப் பிரிவில் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னனி நிலையை அடைந்திருக்கிறோம்.
 
எங்கள் டி.பி.ஆர் பயணத்தில், எங்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தும் பூஸ்டர் டோசாக நாடு முழுவதும் உள்ள சாலை கட்டமைப்புக்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அடுத்த 4-5 ஆண்டுகளில் கமர்ஷியல் வாகனப் பிரிவில் ரேடியலைசேஷன் அளவு 65 சதவிகிதம் அளவுக்கு செல்லும்'' என்றார். இந்த நிகழ்ச்சியில் அப்போலோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், டீலர்கள், பங்குதாரர்கள் ஆகியோர் திரளாகக் கலந்துக்கொண்டனர்.

 
எண்டியூகம்ஃபர்ட் சிஏ:

   இந்த டயர் குறிப்பாக சொகுசு பேருந்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூழலுக்கேற்ற அழுத்த கட்டுபாடு, பேலன்ஸ்டு ரப்பர் மாஸ் டிஸ்ட்ரிபியூஷன் என அனைத்தும் சேர்ந்து மிக சௌகரியமான ஒட்டத்தையும், மைலேஜையும் அளிக்கும். இதை எஸ்.ஆர்.எம் டிரான்ஸ்போர்ட்ஸ் நிறுவன அதிகாரி அறிமுகம் செய்து வைத்தார்.

 
எண்டியூமைல் எல்.ஹெச்.டி:

  மிக நீண்டதூரம் சுமைகளைச் சுமந்துச் செல்லும் வாகனங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 20 சதவிகிதம் அளவுக்கு கூடுதல் மைலேஜ் கிடைக்கும். ஏ.சி.டி.ஒ கேசிங் டிசைன் உள்ளதால், டயர்கள் நீடித்து உழைக்கக்கூடியதாக இருக்கும். இதை பாலிவுட் நடிகரும், நிச்சல் வீரருமான மிலிந்த் சோமன் அறிமுகம் செய்து வைத்தார்.

 
எண்டியூரேஸ் ஆர்.டி.ஹெச்.டி:

  அதிக எடை கொண்ட வாகனங்களுக்கு ஏற்ற வகையில் ஏ.சி.டி.ஒ கேசிங் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதனால் 25 சதவிகிதம் கூடுதல் வலுவுடன் டயர்கள் உள்ளன. இதன் ஒப்பன் மற்றும் விசாலமான டிசைன், வெப்பத்தை சமமாக வெளியேற்றும் வகையில் உள்ளது. இதை இந்திய மல்யுத்த வீரர் கிரேட் காளி அறிமுகம் செய்து வைத்தார்.
 
செய்தி: பச்சமுத்து (மாணவப் பத்திரிக்கையாளர்)
படங்கள்: காஸான்ட்ரா இவான்ஜெலின் (மாணவப் பத்திரிக்கையாளர்)
TAGS :   APOLLO, INDIA, TYRES, HEAVY COMMERICAL VEHICLES, BUSES, TRUCKS, ENDURACE, ENDUCOMFORT, ENDUMILE, MILEAGE, DURABILITY, LUXURY.