குரு - பார்ட்னர்: அசோக் லேலண்டின் புதிய டிரக்குகள் அறிமுகம்!
Posted Date : 21:15 (20/01/2017)
Last Updated : 21:21 (20/01/2017)

 

பார்ட்னர் மற்றும் குரு எனும் இரு டிரக்குகளைக் களமிறக்கியுள்ளது அசோக் லேலண்ட். 14.32 - 16.72 லட்ச ரூபாய்க்குக் (சென்னை எக்ஸ் ஷோரும் விலை) கிடைக்கக்கூடிய குரு டிரக்கை, LCV & HCV செக்மென்ட்டுக்கு இடையே இருக்கக்கூடிய ICV-ல் பொசிஷன் செய்துள்ளது அசோக் லேலண்ட். ICV செக்மென்டில் சிறப்பான மைலேஜ், அதிக பே-லோடு, நம்பகத்தன்மை, சொகுசு ஆகியவற்றை குரு கொண்டிருக்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. 4 & 6 சக்கர ஆப்ஷன்களில் வருகின்ற பார்ட்னர் 14 Feet HSD BS-IV, முறையே 10.29 லட்சம் மற்றும் 10.59 லட்ச ரூபாய்க்குக் (சென்னை எக்ஸ் ஷோரும் விலை) கிடைக்கிறது. LCV செக்மென்ட்டில் முதன்முறையாக ஏஸி ஆப்ஷனைக் கொண்டிருக்கும் பார்ட்னர், ஓட்டுவதற்கும் பயணிப்பதற்கும் சொகுசான டிரக்காக இருக்கும் என அசோக் லேலண்ட் கூறியுள்ளது. 

 
டாடா அல்ட்ரா ICV வாகனத்துடன் போட்டியிடும் அசோக் லேலண்ட் குரு, 115bhp பவர் மற்றும் 32kgm டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய  H-சிரீஸ்  காமன் ரெயில் டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது. பார்ட்னர் போல இதிலும் BS-III & BS-IV மாடல்கள் இருக்கின்றன. மேலும் பலவிதமான பாடி ஆப்ஷன்களும் இருப்பது பலம். LED பார்க்கிங் விளக்கு, Tilt/Telescopic அட்ஜஸ்ட் வசதிகொண்ட ஸ்டீயரிங், வெளிச்சாலை தெளிவாகத் தெரியும்படியான ஓட்டுனர் இருக்கை, படுக்கை வசதியைக் கொண்டிருக்கும் குரு, 12 முதல் 13 டன் வரையிலான எடையைச் சுமந்து செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்த டிரக்கின் ஸ்டைலான கேபின், முழுக்க மெட்டலால் தயாரிக்கப்பட்டுள்ளதால், ஓட்டுனருக்குப் பாதுகாப்பானதாகவும் இருக்கும் எனலாம். 

 
2,953சிசி, 4 சிலிண்டர், 16 வால்வு, DDTi காமன் ரெயில், BS-IV ZD30 சீரிஸ் டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியைக் கொண்டிருக்கும் பார்ட்னர், 105bhp@2,600rpm பவரையும், 28.4kgm@1,350rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதுவே BS-III மாடல் என்றால், அது கூடுதலான 118bhp பவர் மற்றும் 32kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஏப்ரல் 2017 மாதம் முதலாக, அனைத்து வாகனங்களுக்கும் இந்தியாவில் BS-IV மாசு விதிகள் அமலுக்கு வரவிருப்பதால், நாட்டில் உள்ள Tier-II & Tier-III நகரங்களில் இந்த BS-III மாடல் விற்பனை செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். 1 வருட வாரன்டியை ஸ்டாண்டர்டாகக் கொண்டுள்ள பார்ட்னர், கூடுதலாக 3வருடம்/3 லட்சம் கிமீக்கான இன்ஜின் - கியர்பாக்ஸ் வாரன்டியும் இருப்பது பெரிய ப்ளஸ். ஜரோப்பிய மற்றும் ஜப்பான் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கும் பார்ட்னர், மாடர்ன்னான கேபினையும், கார் போன்ற இன்டீரியர் இடம்பிடித்துள்ளது.
 
 
6 முதல் 7.2 டன் Gross Vehicle Weight (GVW)-யைக் கொண்டிருக்கும் பார்ட்னர், 4.6 டன் எடையைச் சுமந்து செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. எனவே பேங்க் - பார்சல் சர்வீஸ் - காய்கறிகள் - FMCG பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு உகந்ததாக இருக்கும் என அசோக் லேலண்ட் கூறியுள்ளது. பவர் ஸ்டீயரிங், கேபிள் முலம் இயங்கும் கியர்பாக்ஸ், Tilt அட்ஜஸ்ட் ஸ்டீயரிங் என சொகுசான ஓட்டுதலுக்கு துணைநிற்கும் அம்சங்கள் பார்ட்னரில் இருக்கின்றன. இந்த டிரக்கின் இன்ஜினைச் சர்வீஸ் செய்ய வேண்டுமானால், கார் பானெட்டைப் போல கேபினைத் தூக்கி விடலாம் என்பது மெக்கானிக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். பலவிதமான பாடி ஆப்ஷன்களுடன் வந்துள்ள பார்ட்னர், இந்தியா முழுதும் உள்ள அசோக் லேலண்டின் 375 ஷோரும்களில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. 

 - ராகுல் சிவகுரு. 
 
 

 

TAGS :   ASHOK LEYLAND, INDIA, TATA MOTORS, ULTRA, TRUCKS, ICV, HCV, LCV, SEGMENTS, BS-III, BS-IV, 4.6 TONNE, GVW, 12 TO 13 TONNE, PAYLOAD, METAL CABIN, SAFETY, COMFORTABLE CABIN, CRDI ENGINE, MANUAL GEARBOX, DIESEL, BAY OPTIONS