KVCET மற்றும் மோட்டார் விகடன் இணைந்து நடத்தும் ''National Level Minibike Design & Fabrication Contest - AUTOFEST 2017''
Posted Date : 18:02 (27/02/2017)Last updated : 18:02 (27/02/2017)

 

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் அமைந்திருக்கிறது கற்பக விநாயகா பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரி (KVCET). இங்கு வருகின்ற மார்ச் 2-3, 2017 ஆகிய தேதிகளில் ''National Level Minibike Design & Fabrication Contest - AUTOFEST 2017'' எனும் போட்டியை, மோட்டார் விகடனுடன் இணைந்து, இந்த கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை நடத்த உள்ளது. Track Mania பிரிவில் 2 போட்டிகளும், Technical Events பிரிவில் 5 போட்டிகளும் நடைபெற உள்ளன.
 
Track Mania பிரிவு போட்டிகளில் பங்குபெற விரும்புவோர், அதற்கான முன்பதிவு தொகையாக 2,500 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் பங்கேற்கும் அணிகள், 6 பேர் கொண்டவையாக இருப்பது அவசியம். Technical Events பிரிவு போட்டிகளில் பங்குபெற விரும்புவோர், அதற்கான முன்பதிவு தொகையாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் பங்கேற்கும் அணிகள், 2 பேர் கொண்டவையாக இருப்பது அவசியம். கம்ப்யூட்டர் கேமிங்கைக் கொண்டிருக்கும்  ONSPOT EXCITEMENT போட்டியில், ஒரே கல்லூரியில் இருந்தும் ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவல்களுக்கு, 9677583358 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
 

Track Mania: (6 Per Team & Entry Fee - Rs.2,500/-)
 
UNDER 80 CC BIKE 
E-BIKE/SOLAR BIKE 

Technical Events: (2 Per Team & Entry Fee - Rs.100/-)
 
MR MECHANIC 
PROJECT EXPO 
POSTER PRESENTATION 
TECHNICAL QUIZ 
ONSPOT EXCITEMENT 

 
Track Mania மற்றும் Technical Events பிரிவு போட்டிகளில் பங்குபெற முன்பதிவு செய்வதற்கு, நாளை (28/2/2017) தான் கடைசி தினம்! மேலும் போட்டிக்கான முன்பதிவு தொகையை, NEFT Transfer / Remittance முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். அதற்கான விபரங்கள் பின்வருமாறு;

Account Name : The Principal
Account Number : 1888101011988
Bank Name : Canara Bank
Branch Name : Vaiyavoor
IFS Code : CNRB0001888
MICR Code : 600015137

 
இது தவிர, வரைவொலை (Demand Draft) முறையையும் பயன்படுத்தலாம். ''The Principal, Karpaga Vinayaga College of Engineering and Technology, payable at Chennai '' என்ற பெயரில் வரைவொலை எடுத்துவிட்டு, அதன் மறுபக்கத்தில் அணித்தலைவரின் பெயர், கல்லூரியின் பெயர், அணித்தலைவரின் மொபைல் எண், அணித்தலைவரின் இ-மெயில் முகவரி ஆகியவற்றை பென்சிலால் எழுதவும். autofest17@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு, NEFT Transfer செய்தவர்கள், அதற்கான E-receipt அனுப்பி வைக்க வேண்டும்.
 
 
போட்டிக்கான முன்பதிவு தொகையைப் பெற்றால் மட்டுமே, அணிகள் அந்தந்த போட்டிகளில் பங்கேற்க முடியும் என அந்த கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. AUTOFEST 2017-ல் கலந்துகொள்ள, வெளியூரில் இருந்து வருபவர்கள், தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் தேவைப்பட்டால், அதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்திருக்க வேண்டும். அதிகபட்சம் 6 பேர் கொண்ட அணி ஒன்றுக்கு, தங்குமிடத்துக்கு 500 ரூபாய் கொடுக்க வேண்டும். உணவும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து முன்கூட்டியே சொல்லியிருப்பது நல்லது. அதற்கும் தனியாக பணம் செலுத்த வேண்டும். அப்புறம் என்ன..., போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகளை அள்ளுங்கள்!

 - ராகுல் சிவகுரு.