இன்று காலை செய்தித்தாள்களைப் புரட்டிய பைக் பிரியர்கள் அனைவரும், அதில் வெளியாகி இருந்த இருசக்கர BS-3 வாகனங்களின் மீதான அசத்தலான தள்ளுபடிகளைப் பார்த்து மலைத்துப்போயுள்ளனர்! முன்னதாக, ''இந்தியாவில் உள்ள தங்களது டீலர்களிடம், மீதமிருந்த BS-3 வாகனங்களை விற்பனை செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்'' என வாகன உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிட்டனர். காரணம், இதற்கு முன்பு வாகனத்துக்கான BS-3 விதிமுறைகள் அமலுக்கு வந்தபோது, அதற்கு முன் பயன்பாட்டில் இருந்த BS-2 வாகனங்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதை அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
 
ஆனால் அந்த வேண்டுகோளை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது கவனிக்கத்தக்கது. நம் நாட்டின் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், BS-3 மாசு விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும் இன்ஜின்கள் பொருத்திய வாகனங்களை விற்பனை செய்வதற்கு, ஏப்ரல் 1-ம் தேதி முதல் முதல் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நாளை முதல் BS-3 வாகனங்களைத் தயாரிப்பது, விற்பனை மற்றும் பதிவு செய்வது மீது நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் BS-4 மாசு விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும் இன்ஜின்கள் பொருத்தப்பட்ட வாகனங்களைத் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதனால் நாடெங்கும் உள்ள டீலர்களிடம் தேங்கியிருந்த 8.24 லட்சத்துக்கும் மேற்பட்ட BS-3 வாகனங்களை, இரண்டு நாட்களுக்குள்ளாக (மார்ச்-30&31, 2017) விற்பனை செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு, அனைத்து வாகனத் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் கலக்கமடைந்துள்ள நிறுவனங்கள், தங்களது கையிருப்பில் உள்ள BS-3 வானங்களை விற்பனை செய்வதில் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை வழங்கியுள்ளன இந்தியாவெங்கும் உள்ள வாகன டீலர்கள், அந்தந்த நிறுவனங்கள் சார்பில் வழங்கிய தள்ளுபடிகளைத் தற்போது காணலாம்!

 
 
 
டாடா மோட்டார்ஸ்: BS-3 தள்ளுபடி

இண்டிகோ E-CS: 1 லட்சம் ரூபாய்
சுமோ சீரிஸ், ஸெனான் பிக்-அப்: 1.5 லட்சம் ரூபாய்
ஸெனான் 5 சீட்டர்: 2 லட்சம் ரூபாய்
 

 
 
மஹிந்திரா & மஹிந்திரா: BS-3 தள்ளுபடி

பொலேரோ பிக்-அப்: 70 ஆயிரம் ரூபாய்
பொலேரோ, தார்: 1 லட்சம் ரூபாய்
 

 
 
டுகாட்டி: BS-3 தள்ளுபடி

மான்ஸ்ட்டர் 821: 2.7 லட்சம் ரூபாய்
ஸ்க்ராம்ப்ளர் Enduro: 2.5 லட்சம் ரூபாய்
ஸ்க்ராம்ப்ளர் Icon: 1.5 லட்சம் ரூபாய்
டயாவெல்: 2 லட்சம் ரூபாய்
 

 
 
ஹார்லி டேவிட்சன்: BS-3 தள்ளுபடி

ஸ்ட்ரீட் 750: 30 ஆயிரம் ரூபாய்
 

 
 
டிரையம்ப்: BS-3 தள்ளுபடி

Daytona 675: 1.5 லட்சம் ரூபாய்
தண்டர்பேர்டு சீரிஸ், ராக்கெட் III: 3 லட்சம் ரூபாய்
டைகர் 800 XRx: 80 ஆயிரம் ரூபாய் & 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆக்ஸசரீஸ்
டைகர் 800 XCx: 60 ஆயிரம் ரூபாய் & 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆக்ஸசரீஸ்

 
 - ராகுல் சிவகுரு.