யூஸ்டு டூ-வீலர் விற்பனை தொடர்பாக, Frost and Sullivan நடத்திய சர்வே ஒன்றில், OLXதான் ஆன்லைனில் யூஸ்டு டூ-வீலர் விற்பனையில் 75 சதவிகித சந்தை மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 3600 பேர் கலந்துகொண்ட சர்வேயில், OLX நிறுவனம்தான் தனது போட்டியாளர்களைக் காட்டிலும் அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஆன்லைனில் யூஸ்டு டூ-வீலர்கள் விற்பனை என்பது, யூஸ்டு கார் விற்பனையைப் போல ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது.
 
 
 
 
நிலைமை இப்படி இருந்தாலும், கடந்தாண்டில் மட்டும் 1.56 மில்லியன் யூஸ்டு டூ-வீலர்களை ஆன்லைனில் விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது OLX நிறுவனம்! இந்த விற்பனை குறித்து, OLX இந்தியா நிறுவனத்தின் தலைவர் அமர்ஜித் சிங் பத்ரா புள்ளிவிபரங்களுடன் கூறியதாவது, '' அதிக இருசக்கர வாகனங்கள் விற்பனையாகும் இந்தியா போன்ற நாட்டில், ஆன்லைனில் முறையாக வாகனங்களை விற்க/வாங்க செய்வதில் எந்த நிறுவனமும் ஈடுபடவில்லை. அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்திதான் OLX  இந்தியாவில் கால்பதித்தது.
 
 
 
 
எங்கள் நிறுவனத்தின் வலைதளத்தில் யூஸ்டு டூ-வீலர்களைப் பார்க்க வரும் மக்களில் 75 சதவிகிதத்தினர், நிச்சயமாக தங்களுக்கு ஏற்ற வாகனத்தை இங்கேயே வாங்கிவிடுவார்கள். தவிர ஒரே நேரத்தில்  5 பேர் வலைதளத்தைப் பார்க்கிறார்கள் என்றால், அதில் 3 பேர் எங்களிடம் இருந்துதான் தமக்குப் பிடித்த வாகனத்தை வாங்குகிறார்கள். மேலும் இந்தியாவில் ஒரே நேரத்தில் 4 யூஸ்டு டூ-வீலர்கள் விற்பனைக்கு வருகிறது என்றால், அதில் ஒன்று எங்களது வலைதளத்தில்தான் பதிவேற்றப்படுகிறது'' என்பது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார்!
 
 
 
 
ஒவ்வொரு மாதமும் இந்நிறுவனத்தில் வலைதளத்திற்கு, மக்களிடம் இருந்து 3.5 மில்லியன் விசாரிப்புகள் வந்து குவிகின்றன. அதில் 1.3 லட்சம்பேர் வாகனங்களை அந்த மாதத்திலேயே வாங்கிவிடுகிறார்கள் என்பதால், ஒருமாதத்துக்கு மட்டும் OLX சம்பாதிக்கும் தொகை 488 கோடி ரூபாய்! அதாவது, ஒரு மாதத்தில் இந்த நிறுவனம் விற்பனை செய்யும் யூஸ்டு டூ-வீலரின் சராசரி மதிப்பு 37 ஆயிரம் ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது. OLX-ல் அதிகமாகத் தேடப்படும் வாகனங்களைத் தற்போது பார்ப்போம்;
 
 
 

OLX-ல் பிரபலமான ஸ்கூட்டர்: ஹோண்டா ஆக்டிவா 110
OLX-ல் பிரபலமான பைக்: பஜாஜ் பல்ஸர் சீரிஸ்
OLX-ல் பிரபலமான க்ரூஸர்: ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350/500
OLX-ல் பிரபலமான ஸ்போர்ட்ஸ் பைக்: கேடிஎம் டியூக் 200/390
OLX-ல் பிரபலமான பிரிமியம் பைக்: ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 
 

 – ராகுல் சிவகுரு.