ஆட்டோமோட்டிவ் இன்ஜினீயரிங் படிக்கப் போறீங்களா? இங்க வாங்க!
Posted Date : 15:07 (05/04/2017)
Last Updated : 17:53 (12/04/2017)

 

 
கோயம்புத்தூரில் இருக்கும் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் பிரிவு மற்றும் மோட்டார் விகடன் இணைந்து, ஆட்டோமோட்டிவ் இன்ஜினீயரிங் தொடர்பான பயிலரங்கத்தை, வருகின்ற ஏப்ரல் 22, 2017 அன்று நடத்துகின்றன. பாஷ், அசோக் லேலண்ட், மஹிந்திரா, ராயல் என்ஃபீல்டு, ஆம்பியர் ஆகிய முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், தற்போது +2 படிப்பவர்கள் மற்றும் +2 முடித்து கல்லூரிக்குச் செல்லத் தயாராக இருக்கும் மாணவர்களுக்கு எனப் பிரத்யேகமாக, ஆட்டோமோட்டிவ் இன்ஜினீயரிங் துறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை இந்தப் பயிலரங்கில் பகிர்ந்துகொள்கிறார்கள்.
 
எனவே +2 படித்த பிறகு, பொறியியல் படிப்பை மேற்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு, இந்தப் பயிலரங்கம் பயனுள்ளதாக இருக்கும். குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்திருக்கும் ராமானந்த அடிகளார் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இந்தப் பயிலரங்கத்தில் கலந்துகொள்ள, எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை; https://goo.gl/PfBQ3K  என்ற வலைதளத்துக்குச் சென்று, இலவசமாக முன்பதிவு செய்தால் போதும். இதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், தங்களது பெற்றோர்களுடன் வருவதற்கு அனுமதி உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு, ஜே.சாய்கணேஷ்: 0422 - 2661380, 96264 86565  ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

 - ராகுல் சிவகுரு
 
 
 
TAGS :   COIMBATORE, AUTOMOTIVE ENGINEERING, KUMARAGURU COLLEGE OF TECHNOLOGY, TAMILNADU, MOTOR VIKATAN, CARRER GUIDANCE WORKSHOP, ASHOK LEYLAND, AMPERE, MAHINDRA, BOSCH, ROYAL ENFIELD, EXPERTS SPEAK.