ஆட்டோமொபைல் படிப்பும் வேலை வாய்ப்பும் - கோவை KCT கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கம்!
Posted Date : 17:04 (28/04/2017)Last updated : 17:04 (28/04/2017)

 

 

 

கோவையில் உள்ள குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி - பொறியியல் கல்லூரியில், கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதியில், ''ஆட்டோமொபைல் படிப்பும் - அதற்கான வேலைவாய்ப்புகளும்'' குறித்த கருத்தரங்கத்தை, மோட்டார் விகடனுடன் இணைந்து நடத்தியது குமரகுரு பொறியியல் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை.

 

 

இக்கல்லூரியில் அமைந்திருக்கும் ராமானந்த அடிகளார் ஆடிட்டோரியத்தில், எவ்வித நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக நடைபெற்ற இந்த கருத்தரங்கில், +2 முடித்த ஏராளமான பள்ளி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

 

 

ஆட்டோமொபைல் துறையின் சிறப்புகள் குறித்துப்பேசியதுடன், இந்த கருத்தரங்கை இனிதே துவக்கிவைத்தார், குமரகுரு பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஆர்.எஸ்.குமார். இவரைத் தொடர்ந்து பேசிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டிஸைன் பிரிவுத் தலைவர் சிவகுமார், டிஸைன் பிரிவு குறித்தும், அதில் உள்ள பல்வேறு விதமான தொழில் பிரிவுகள் குறித்தும் அருமையாக விளக்கினார்.

 

 

 

இவருக்கு அடுத்துப் பேசிய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டிஸைன் பிரிவு தலைவர் சத்தியசீலன், ஆட்டோமொபைல் துறையில் நிகழ்ந்துள்ள நவீன மாற்றங்கள் மற்றும் தேவைகள் குறித்துச் சிறப்பாகப் பேசினார்.

 

 

இவர்களைத் தொடர்ந்து, கருத்தரங்கில் இறுதியாகப் பேசிய பாஷ் நிறுவனத்தின் ஹைபிரிட் பிரிவைச் சேர்ந்த நந்தகுமார், வருங்காலத்தில் அடுத்துவரவிருக்கும் ஆட்டோமொபைல் தொழில்நுட்பங்கள் குறித்தும், அதில் முதன்மையான ஹைபிரிட் தொழில்நுட்பம் குறித்து, மாணவர்களுக்கு எளிதாக விளக்கினார். சுமார் 300-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர்.

 

 


 - கா. பாலமுருகன்.
படங்கள்: தி. விஜய்.