BS-IV இன்ஜின்களுக்கான அடுத்தநிலை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது அசோக் லேலண்ட்!
Posted Date : 20:04 (29/04/2017)Last updated : 20:04 (29/04/2017)

 

 

 

பொதுவாக வாகனங்கள் வெளியிடக்கூடிய புகையில் உள்ள நச்சுத்தன்மையானது, பாரத் ஸ்டேஜ் (Bharat Stage - Emission Norms) எனப்படும் விதிகளின்படி அமைந்திருக்கும். 2000-ம் ஆண்டு முதலாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் இந்த விதிகள், BS-I, BS-II, BS-III எனும் அடுத்தடுத்த நிலைகளைத் தாண்டி, இப்போது அனைத்து விதமான வாகனங்களும் BS-IV விதிக்கு இந்தியா இப்போதுதான் நகர்ந்திருக்கிறது.
 
இது ஐரோப்பிய Emission Norms-களைப் பின்பற்றியே இயற்றப்படுகின்றன. கடந்த 2017 மாதம், ஏப்ரல் 1-ம் தேதி முதலாக, BS-III விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களின் உற்பத்தி மற்றும் வியாபாரத்தை, உடனடியாகத் தடை செய்யும்படியான சட்டத்தை, உச்சநீதிமன்றம் அமலுக்குக் கொண்டு வந்தது.

 
 
 
இதனால் இந்தியாவில் BS-III கட்டமைப்பின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனையாகாமல் தேங்கியிருந்த வாகனங்கள் அனைத்தும், தள்ளுபடிகளைக் கொடுத்து அந்தந்த நிறுவனங்கள் விற்பனை செய்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம்,
 
BS-IV இன்ஜின்களுக்குப் பிரத்யேகமான i-EGR (INTELLIGENT EXHAUST GAS RECIRCULATION) தொழில்நுட்பத்தை, சென்னை நந்தம்பாக்கம் அமைந்திருக்கும் டிரேட் சென்டரில் நடைபெற்ற 4 நாள் கண்காட்சியில் காட்சிபடுத்தியது. 130 bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய BS-IV இன்ஜின்களில், i-EGR தொழில்நுட்பம் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 

 
 
BS-III மற்றும் BS-IV ஆகிய Emission Norms-க்கு இடையேயான வித்தியாசம் என்னவென்றால், இன்ஜினில் இருந்து வெளிப்படும் புகையில் உள்ள நச்சுத்தன்மையின் அளவு வேறுபடுகின்றன என்பதுதான்! BS-III-யைக் காட்டிலும், BS-IV-ல் நச்சுத்தன்மை குறைவு. BS-IV இன்ஜின்களில் i-EGR தொழில்நுட்பத்தைப் புகுத்தியது குறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத். கே. தசரி கூறுகையில்
 
“இந்த i-EGR தொழில்நுட்பத்தின் முதன்மையான பணி, வாகனத்தில் இருந்து வெளிவரும் புகை பிரிந்து, அதில் ஒருபகுதி டர்போ சார்ஜரால் உள்ளிழுக்கப்படுகின்றன. அது இன்ஜினுள்ளே கம்பஸன் ஸ்ட்ரோக்கில் பயன்படுத்தப்படுவதால், புகையின் அளவு பாதியாகக் குறையும் வாய்ப்புள்ளது.
 

 
 
இது முன்பிருந்த SCR (SELECTIVE CATALYTIC REDUCTION) தொழில்நுட்பத்தைக் காட்டிலும், குறைவான பராமரிப்புச் செலவைக் கொண்டிருக்கிறது. தவிர அதன் இயக்குமுறையும் மிகவும் எளிமையாக டிசைன் செய்யப்பட்டுள்ளது என்பதுடன், சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது; மேலும் இந்த தொழில்நுட்பம் பிரத்யேகமாக இந்தியர்களுக்காக, இந்தியர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
 
இதனுடன் கண்காட்சியில், தனது டிரக், டிப்பர் மற்றும் LCV செக்மென்ட்களில் இருக்கக்கூடிய 30 தயாரிப்புகளையும் காட்சிபடுத்தியது அசோக் லேலண்ட். இறுதியாக அசோக் லேலண்டின் சர்வீஸ் - சலுகைகள் மற்றும் வாடிக்கயாளர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை முன்னிறுத்தினார் வினோத். கே. தசரி.
 
 
– எஸ். எம். கோமதி (மாணவப் பத்திரிகையாளர்)