ஜெனி 2.0 - பைக் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மறுபிரவேசம்!
Posted Date : 21:22 (17/05/2017)
Last Updated : 21:35 (17/05/2017)

 

 

நுகர்வோர் மற்றும் வியாபாரத்திற்கான ஸ்மார்ட் லாஜிஸ்டிக்ஸ் தளமாகத் திகழ்ந்த ஜெனீ, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் தனது வர்த்தகத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. துபாய் மற்றும் இந்தியாவில் இருக்கும் HNI-களில் இருந்து சுமார் $250,000 நிதி திரட்டப்பட்ட பின்னர், தனது வணிகத்தை மே 15, 2017 அன்று அதிகாரப்பூர்வமாகத் துவக்கியிருக்கிறது. குறைந்தபட்ச ஆர்டர் அல்லது தூரக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத, ஒரு சாட் வசதியை அடிப்படையாகக் கொண்ட தளம்தான் ஜெனீ. இங்கே பதியப்படும் ஒவ்வொரு ஆர்டரும், எவ்விதமான பொருளாக இருந்தாலும், பிக்-அப் - டிராப் அடிப்படையிலேயே இருக்கின்றன. எனவே ஒரு ஆர்டரைப் போட்ட அடுத்த 20-40 நிமிடங்களில், அது டெலிவரி ஜெனீகளின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 
 
 
 
மேலும் தேவைபட்டால் 7 நாட்கள் வரை டெலிவரியைத் திட்டமிட்டு வைக்க முடியும். செக் போன்ற ஆவணங்கள், வீட்டிலிருந்து அலுவகத்துக்கு மதிய சாப்பாடு, தேவையான அளவு மளிகை சாமான்கள், முக்கியமான மருத்துவ அறிக்கைகள், அவசர மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள், பிறந்தநாள் போன்ற சிறப்பான சந்தர்ப்பங்களில் கேக்குகள்; மனதுக்குப் பிடித்தமான காபி மற்றும் உணவுப் பொருட்களை. அருகாமையிலிருந்த உணவகங்கள் சாலையோர கடைகளிலிருந்து சேகரித்து, உங்களது கைகளுக்குக் கொண்டுவர, அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில், ஜெனியின் சேவையைப் பயன்படுத்தலாம்.
 
 
 
 
இந்த நிகழ்வின் போது பேசிய, ஜெனீயின் இணை நிறுவனர்களுள் ஒருவரான ராகேஷ் மானி கூறுகையில், "ஜெனியின் செயல்பாடு நிறுத்தப்பட்ட போது, எங்களால் நம்பமுடியாத அளவிற்கு வாடிக்கையாளர்கள் அன்பு வைத்திருந்தார்கள். இதனாலேயே நாட்டின் பிரதான நகரம் மற்றும் போட்டிமிகுந்த சந்தைகளுள் ஒன்றாக அறியப்படும் சென்னையில், பெரும் வணிகத்தை எங்களால் செய்ய முடிந்தது. புதிய முதலீடு மற்றும் மறுபிரதித்துவமான அறிவைப் பயன்படுத்தி, நாம் உருவாக்கும் சேவையின் மதிப்பை மக்கள் பார்க்கிறார்கள். எனவே நாங்கள் மிகவும் தைரியம் மற்றும் சிறப்பான வணிகத்தின் அடிப்படைகளைக் கொண்டு,
 
 
 
 
சென்னையைச் சுற்றிலும் இருக்கக்கூடிய லாஜிஸ்டிக்ஸ் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிப்போம். நாங்கள் மீண்டும் புதிதாக உருவாக்கியுள்ள தளத்தில், வணிகம் - நுகர்வோர் - டெலிவரி ஜெனீகள் என அனைவருக்குமான மனநிறைவை அளிப்பதே பிரதான நோக்கம்.  To deliver delight to you என்ற கோட்பாட்டைப் பின்பற்றுவதே, ஜெனீயில் எங்களுடைய ஒரே பணியாக இருக்கும்: ஆக ஒவ்வொரு முறையும் நீங்கள் எங்களுக்கு அளிக்கும் ஆர்டர், உங்களுக்கு சந்தோஷப்படுத்தும் வரை நாங்கள் ஓய மாட்டோம்" என்றார்.
 
 
 

ஜெனீயின் இணை நிறுவனர்களுள் ஒருவரான ஶ்ரீகேஷ் கிருஷ்ணன் கூறும்போது, ''சென்னை முழுக்க வணிகம் செய்யும் பொருட்டு டிக்கெட்டின் அளவு, சராசரி தூரம், செய்யப்பட்ட ஆர்டரின் திட்டமிடல் மற்றும் பல விதிகளின் அடிப்படையில், டெலிவரி ஜெனீகள் விநியோகம் செய்வதைச் சரியாகத் திட்டமிட்டு நிறைவேற்றுகிறார்கள். இதனாலேயே கொலப்பசி, கேக் வாக், ஸ்ரீ மிட்டாய், க்ரின் கோப்ளின், ஜல்லிக்கட்டு, பதாஞ்சலி, ஃபெர்ன்ஸ் & பெட்டல்ஸ், ஜஹானா, கோல்டு வின்னர், அமேசான் போன்ற 150 நிறுவனங்கள், எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது அடுத்த 8-12 மாதங்களில், கூடுதலான வருவாய் ஆதாரங்களை உருவாக்குவதோடு,
 
 
 
 
லாபம் சம்பாதிப்பதில் சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம். இதனுடன் லாஜிஸ்டிக்ஸில் இருக்கும் பிரச்னைகளைக் களையும் புதுமையான தயாரிப்புமுறை மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்ப, ஜெனீ தனது வட்டத்தை விரிவுபடுத்தும் முடிவில் இருக்கிறது. தவிர ஆர்டரின் பிக்-அப் மற்றும் டிராபிற்காக, ஜெனீ வசூலிக்கும் கட்டணத்தில் (70 ரூபாய் அடிப்படை தொகை) 85% டெலிவரி ஜெனீக்கு செல்கிறது; மிச்சமுள்ள 15%தான் நிறுவனத்திற்கு வருகிறது'' என்றார்.
 

- ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   GENIE, BIKE LOGISTICS COMPANY, AMAZON, GOLD WINNER, KOLAPASI, CAKE WALK, PATHANJALI, SRI MITTAI, GREEN GOBLIN, JALLIKATTU, CUSTOMERS, DELIVERY GENIES, DUBAI, CHENNAI, HNI, INVESTMENT, PROFIT, LOSS, BUSINEES FUNDS, $250,000.