மோட்டார் விகடன் - லேட்டஸ்ட் நியூஸ்!
Posted Date : 19:05 (23/05/2017)Last updated : 20:05 (23/05/2017)

 

 

 

ஒரு விபத்து நேரும்போது, நாம் பயணிக்கும் காரின் கட்டுமானம், எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பதைச் சொல்லும் சர்வதேச அமைப்புதான் ''Global NCAP''. இவர்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பிரபலமானக் கார்களைக் க்ராஷ் டெஸ்ட் செய்து, அவற்றின் பாதுகாப்பு அளவுகளைப் புட்டு புட்டு வைத்தது தனிக்கதை.
 
 
 
 
தற்போது ஒரகடத்தில் உள்ள ரெனோ - நிஸான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியை, சமீபத்தில் க்ராஷ் டெஸ்ட் பரிசோதனைக்கு உட்படுத்தியது Global NCAP. இதில் காற்றுப்பை இல்லாத பேஸ் மாடல் ஜீரோ ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கையும், ஓட்டுனருக்கான காற்றுப்பை கொண்ட மிட் வேரியன்ட் (RXL மாடல்), 3 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளன! 
 
 
 

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் கால்பதித்து ஏறக்குறைய 21 ஆண்டுகள் ஆகிவிட்டது! இன்னமும் கூட அவர்களால் போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில் ஒரு நிலையான இடத்தை (0.85% மார்க்கெட் ஷேர்) பிடிக்க முடியவில்லை. மிக மந்தமான கார் விற்பனை மற்றும் அதிக நஷ்டம் என நிறுவனம் ஒரேடியாகக் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. எனவே ஆண்டுக்கு 1.10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்ட குஜராத்தில் (Halol) இருக்கக்கூடிய தனது கார் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, கடந்த ஏப்ரல் 28-ம் தேதியன்று ஜெனரம் மோட்டார்ஸ் மூடுவிழா நடத்தியது அறிந்ததே.
 
 
 
 
தற்போது இந்நிறுவனத்துக்குச் சொந்தமாக, புனேவில் (Talegaon) இருக்கக்கூடிய மற்றொரு கார் தொழிற்சாலையில், இனி ஏற்றுமதி சந்தைகளுக்குத் தேவையான அளவு கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்தாண்டு இறுதியோடு, இந்தியாவில் தனது கார்களின் விற்பனையை நிறுத்த முடிவெடுத்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்! 

 
 
 
பெப்பி டிசைன், ஹேப்பி டிரைவ் என மனதைக் கவரும் இயானை விரும்ப, இன்னொரு அம்சம் வந்துவிட்டது. ஆம், பட்ஜெட் செக்மென்ட்டில் க்விட்டைத் தொடர்ந்து, இயானிலும் இப்போது டச் ஸ்க்ரீன் ஆப்ஷன் வந்துவிட்டது; அதுவும் 6.2 இன்ச் சைஸில் -  (பிரிமியமான ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் கார்களிலேயே, 7.0 இன்ச்தான்!) க்விட்டின் எஸ்யூவி போன்ற டிசைனைத் தாண்டி, அதில் பெருமையாகச் சொல்லப்பட்ட மற்றுமொரு விஷயம்;
 
 
 
 
டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான். ஆகவே இப்போது இயானும், கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இறங்கியடித்திருக்கிறது. இந்த டச் ஸ்க்ரீன் ஆப்ஷன், 800 சிசி Era+, Magna+ வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும். 1.0 லி இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களுக்கு இல்லை என்பது மைனஸ்!

 - ராகுல் சிவகுரு.