சிங்கிள் பிஸ்டன் - ஏர் டிஸ்க் பிரேக்கை அறிமுகப்படுத்தியது WABCO!
Posted Date : 17:05 (29/05/2017)Last updated : 11:06 (12/06/2017)

 

 

தான் காப்புரிமை பெற்றிருக்கும், நம்பகத்தன்மையான சிங்கிள் பிஸ்டன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கமர்ஷியல் வாகனங்களுக்கான PAN 17 மற்றும் PAN 22 எனும் இரு ஏர் டிஸ்க் பிரேக்குகளைக் களமிறக்கியுள்ளது WABCO நிறுவனம். கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையான இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெல்ஜியத்தில் இருந்தாலும், உலகளவில் 40 நாடுகளில் 2400 பொறியாளர்கள் & 13 ஆயிரம் ஊழியர்களுடன் WABCO இயங்கிவருகிறது.
 
 
 
 
FEM மென்பொருளைப் பயன்படுத்தி, காம்பேக்ட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இவை, 17.5 இன்ச் மற்றும் 22.5 இன்ச் வீல்களுக்குப் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. 1996-ம் ஆண்டில் முதன்முதலாக அறிமுகமான PAN 17 சீரிஸ் (பிரேக் பேடு - 19 மிமீ & எடை - 23 கிலோ) டிஸ்க் பிரேக்குகளை, காலத்துக்கு ஏற்ப அப்டேட் செய்து வந்திருக்கிறது  WABCO. PAN 22 சீரிஸ் (பிரேக் பேடு - 23 மிமீ & எடை - 36 கிலோ) டிஸ்க் பிரேக்கைப் பொறுத்தமட்டில், அவை 18 டன் வரை எடை சுமக்கும் திறன் படைத்த டிரக் & டிரெய்லர்களில் பயன்படுத்தப்படுகின்றன.
 
 
 
 
இவற்றில் முன்பைவிட 2 மிமீ கூடுதல் தடிமனான டிஸ்க் பேடுகள் பொருத்தப்பட்டு உள்ளன; ஆக இவை பழைய சிஸ்டத்தைவிட குறைவான உராய்வுடன் இன்னும் துல்லியமாக இயங்கும் என்பதுடன், வாடிக்கையாளர்களின் மனநிறைவும் - சர்விஸ் இடைவெளியும் அதிகரித்திருப்பதாக WABCO கூறியுள்ளது. 2016-ல் இந்நிறுவனம், 314 காப்புரிமைகளையும், $2.8 பில்லியன் அளவுக்கான வர்த்தகத்தையும் செய்திருப்பது கவனிக்கத்தக்கது.
 
 
 
 

டிரம் பிரேக்குகளுடன் ஒப்பிடும்போது, இந்தப் புதிய ஏர் டிஸ்க் பிரேக்குகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு;

  • ஏர் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களின் Stopping Distance மிகக் குறைவு.
  • அனைத்து வகை சாலைப் பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு என்பதால், போட்டியாளர்களைவிட அதிக ஆயுட்காலம்;
  • பிரேக் பேடுகளை மாற்றுவதற்கு, டிரம் லைனிங்கை மாற்றும் நேரத்தில் நான்கில் ஒரு பங்கு நேரமே தேவைப்படும்!
  • டிரம் லைனிங்கை விட அதிக ஆயுளைக் கொண்டிருக்கும் பிரேக் பேடுகள்; சர்வீஸ் இடைவெளி அதிகம்.
  • அனைத்து விதமான சாலைகளிலும், சீரான பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸ்.

 

 

  • துருப்பிடிப்பதைத் தடுக்கும் KTL கோட்டிங் இருப்பதால், ஆயுட்காலமும் அதிகம்; பராமரிப்புச் செலவுகள் குறைவு!
  • சரியான விகிதத்தில் பிரேக்குகளை அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய வசதி இருப்பதால், சமமான தேய்மானம்;
  • போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, Hot Runner ஏற்படுவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு.
  • குறைவான உதிரிபாகங்கள் இருப்பதால், ஏர் டிஸ்க் பிரேக்கின் மொத்த எடையும் குறைவு; மைலேஜும் அதிகம்!
  • வலிமையான கட்டுமானத்துடன் திறந்தவெளியில் இருப்பதால், சிறப்பான ஏர் கூலிங் மற்றும் குறைவான சத்தம்;

 

  - ராகுல் சிவகுரு.