எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி RR310S? முழு ஃபோட்டோ ஆல்பம்!
Posted Date : 12:06 (03/06/2017)Last updated : 15:06 (03/06/2017)

 

 பெரிய விண்ட்ஸ்க்ரீன் இருப்பது, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது  வசதியாக இருக்கும்.

டிவிஎஸ் நிறுவனத்தின் பவர்ஃபுல்லான - ஃபுல் பேரிங் கொண்டிருக்கும் பைக், அப்பாச்சி RR310S தான்!

 சீட்டிங் பொசிஷன், அனைத்து விதமான ரைடர்களுக்கும் ஏற்றபடி இருக்கும் என நம்பலாம்.

 LED டெயில் லைட், ஸ்டைலாக இருக்கிறது. எக்ஸாஸ்ட் பைப் பிஎம்டபிள்யூவில் இருப்பதுதான்!

 ட்ரெல்லிஸ் ஃப்ரேம், சஸ்பென்ஷன், டயர்கள் என மெக்கானிக்கல் பாகங்கள், பிஎம்டபிள்யூவில் இருப்பதே.

 

 யமஹா R15, பஜாஜ் RS200, கேடிஎம் RC390 ஆகியவற்றின் தாக்கம், இந்த பைக்கில் ஆங்காங்கே தெரிகிறது.

 

 இரட்டை புரொஜெக்டர் ஹெட்லைட் - LED DRL செட்-அப், BUMBLE BEE கண்களைப் போலவே இருக்கிறது.

  பிஎம்டபிள்யூ G310R பைக்கில் இல்லாத LED இண்டிகேட்டர்கள், அப்பாச்சி RR310S பைக்கில் உண்டு.

 ஃபுல் டிஜிட்டல் மீட்டர், கேடிஎம் போலவே இருக்கிறது; ஸ்விட்ச்களின் டிசைனில் புதுமை இல்லை.

 அப்பாச்சி RR310S பைக்கில் இருப்பது, பிஎம்டபிள்யூ G310R பைக்கில் இருக்கும் அதே 313சிசி இன்ஜின்.

 சீட்டுகள் ஓரளவுக்கு சொகுசாகத் தெரிந்தாலும், பின்னால் இருப்பவருக்கு கிராப் ரெயில் கிடையாது!

 மோனோஷாக் சஸ்பென்ஷன் மீது தூசு படிவதைத் தடுக்கும் விதமாகப் பொருத்தப்பட்டுள்ள கவர்!

 தடிமனான USD ஃபோர்க் & ரேடியல் கேலிப்பர்கள், கேடிஎம் RC 390 பைக்கை நினைவுபடுத்துகின்றன.

 ஏபிஎஸ் ஆப்ஷனல் என்பதுடன், மிஷ்லின் டயர்கள் கிடைப்பதும் பெரிய ப்ளஸ்.

 

 பிஎம்டபிள்யூ G310R பைக்கைப் போலவே, எக்ஸாஸ்ட் போர்ட் 180 டிகிரி திருப்பப்பட்டிருக்கிறது.

 - ராகுல் சிவகுரு, படங்கள்: வி.வி. மணிபாரதி.