மோட்டார் விகடன் - லேட்டஸ்ட் நியூஸ்!
Posted Date : 12:10 (12/06/2017)
Last Updated : 12:15 (12/06/2017)


விலை குறையுமா வால்வோ?

 
இந்தியாவில் கால்பதித்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்றுவரை தனது கார்களை CBU முறையில் (V40, V40 Cross Country, S60, S60 Cross Country, S60 Polestar, S90, XC60, XC90) இறக்குமதி செய்தே விற்பனை செய்து வருகிறது வால்வோ; ஆனால் உள்நாட்டிலேயே கார்களை அசெம்பிள் செய்யும் ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடீஸ் பென்ஸ், ஜாகுவார் ஆகிய லக்ஸூரி கார் நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது அதிகபட்ச இறக்குமதி வரி இருந்தாலும்,
 
 
 
 
தனது கார்களின் விலையை அசத்தலாகவே இந்நிறுவனம் இதுவரை நிர்ணயித்து வந்திருக்கிறது. தற்போது லக்ஸூரி கார்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டிலேயே தனது கார்களை அசெம்பிள் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறது வால்வோ. ஏற்கனவே பெங்களூரில் தனக்குச் சொந்தமாக இருக்கும் கனரக வாகனத் தொழிற்சாலையில், கான்ட்ராக்ட் அடிப்படையில் டிமாண்டுக்கு ஏற்ப கார்களை அசெம்பிள் செய்ய உள்ளது வால்வோ! 

 
மிட்சுபிஷி... இப்போ பிஸி!

 
ஜப்பானைச் சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனம், இந்தியச் சந்தையில் தான் விற்பனையிலிருந்து நிறுத்திய கார்களைத் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக மீண்டும் அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த 2012-ல் ஃபார்ச்சூனருக்குப் போட்டியாக பஜேரோ ஸ்போர்ட், 2016-ல் ஜெர்மன் லக்ஸூரி எஸ்யூவிகளுக்குப் போட்டியாக மான்ட்டெரோ ஃபேஸ்லிஃப்ட் என இப்போது கொஞ்சம் பிஸியாகிவிட்டது மிட்சுபிஷி; தற்போது டூஸான், CR-V, காம்பஸ் ஆகிய பெட்ரோல் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, தனது அவுட்லேண்டர் எஸ்யூவியை விரைவில் இந்நிறுவனம் களமிறக்க உள்ளது. 2008-ல் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமான இந்த எஸ்யூவியின் 3-வது தலைமுறை மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனைத்தான்,
 
 
 
 
CBU முறையில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது மிட்சுபிஷி. முன்னே சொன்ன எஸ்யூவிகளைப் போல மோனோகாக் சேஸி கட்டுமானத்தைக் கொண்டிருக்கும் அவுட்லேண்டரில், S-AWC 4 வீல் டிரைவ் - 7 இருக்கைகள் இருப்பது ப்ளஸ்; இதில் பொருத்தப்பட்டிருக்கும் 2.4 லிட்டர், 4 சிலிண்டர் (4J12) பெட்ரோல் இன்ஜின் - 6 ஸ்பீடு CVT கியர்பாக்ஸ் கூட்டணி, 169bhp பவர் - 22.5kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள தனது 50 டீலர்களில், இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லாவிட்டாலும், இதற்கான புக்கிங் (உத்தேச எக்ஸ் ஷோரூம் விலை - 29 லட்சம்) ஏற்கனவே துவங்கி விட்டன!

 
 - ராகுல் சிவகுரு.

 
TAGS :   V40, V40 Cross Country, S60, S60 Cross Country, S60 Polestar, S90, XC60, XC90, CR-V, CBU, COMPASS, INDIA, TUSCON, OUTLANDER, MITSUBISHI, VOLVO, SUV.