டெஸ்ட்டிங்கில் 2017 ஹூண்டாய் வெர்னா! ஸ்பை படங்கள் உள்ளே!
Posted Date : 14:06 (17/06/2017)Last updated : 14:06 (17/06/2017)


ஹோண்டா சிட்டி, மாருதி சுஸூகி சியாஸ், ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் ஆகிய கார்களுக்குப் போட்டியாக, முற்றிலும் புதிய வெர்னா மிட் சைஸ் செடானைக் களமிறக்க உள்ளது ஹூண்டாய். இது ரஷ்யா, கனடா மற்றும் சீனாவில் கடந்தாண்டு இறுதியிலேயே விற்பனைக்கு வந்துவிட்டது கவனிக்கத்தக்கது.
 
 
 
 
எப்போதும் போலவே Fuidic Sculpture 2.0 டிசைன் கோட்பாடுகளின் படியே அது வடிவமைக்கப்பட்டிருந்தாலும், LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் - டெயில் லைட் மற்றும் 17 இன்ச் டயமன்ட் கட் அலாய் வீல்களுடன், மினி எலான்ட்ரா போன்ற பக்குவமான தோற்றத்தில் புதிய வெர்னா இருக்கிறது. மேலும் காரின் அளவுகளில் (15 மிமீ கூடுதல் நீளம் - 29மிமீ கூடுதல் அகலம் - 10மிமீ கூடுதல் வீல்பேஸ் - 16 லிட்டர் பூட் ஸ்பேஸ்) முன்னேற்றம் இருப்பதால், முன்பைவிட அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம்.
 
 
ஆனால் கிரவுண்ட் கிளியரன்ஸ் 10மிமீ குறைந்திருக்கிறது. புதிய வெர்னாவின் கேபினிலும், எலான்ட்ராவின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது; சில்வர் ஃப்னிஷுடன் கூடிய சென்டர் கன்சோல், ஆன்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் பிளே - மிரர் லிங்க் உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றை இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம்.
 
 
 
 
இன்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, அதே 1.4 லிட்டர் & 1.6 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்களே தொடர்கின்றன; என்றாலும் மாருதி சுஸூகி சியாஸ் போல Mild ஹைபிரிட் சிஸ்டத்தைச் சேர்க்கும் முடிவில் இருக்கிறது ஹூண்டாய். இதனால் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், Brake Energy Regeneration போன்ற தொழில்நுட்பங்கள் காரில் இடம்பெறும் என்பதால், பழைய காரைவிட 2-5% கூடுதல் மைலேஜை எதிர்பார்க்கலாம்;
 
 
6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது. புதிய வெர்னாவின் கட்டுமானத்தில் 54.5% High Strength ஸ்டீல் மற்றும் Structural Adhesives இடம்பெற்றுள்ளதால், காரின் உறுதித்தன்மை 32% அதிகரித்திருக்கிறது. இதுதவிர ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷனும், சிறப்பான ஓட்டுதல் அனுபவத்துக்காக டியூன் செய்யப்படும் எனத் தெரிகிறது.
 
 
 
 
அனைத்து வேரியன்ட்களிலும் 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக், ABS, 2 காற்றுப்பைகள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டிருப்பதுடன், டாப் வேரியன்ட்களில் கூடுதலாக EBD,ESP, மொத்தம் 6 காற்றுப்பைகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் இருப்பது ப்ளஸ். வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் களமிறங்க உள்ள புதிய வெர்னா, சென்னையை அடுத்த வண்டலூர் - மீஞ்சூர் நெடுஞ்சாலையில் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது, அதனைப் படம் பிடித்திருக்கிறார், மோட்டார் விகடனின் வாசகரான ராகேஷ்.
 
 
 - ராகுல் சிவகுரு.