ஜிஎஸ்டி எதிரொலி: கார்/பைக் விலையில் படையெடுக்கும் தள்ளுபடிகள்!
Posted Date : 13:59 (20/06/2017)
Last Updated : 14:09 (20/06/2017)

 

தங்கம் விலையைப் போல, தினசரி மாறக்கூடிய பெட்ரோல்/டீசல் விலை விதிமுறை பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 1,2017 முதலாக, தற்போது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது. இதனால் பல பொருட்களின் விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உடனடியாகப் புதிதாக கார்/பைக் வாங்கும் முடிவில் இருக்கும் பலர், ஜிஎஸ்டியின் காரணமாக அதனைத் தள்ளிவைத்துக் கொண்டே வருகின்றனர்.
 
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, கார் மற்றும் பைக் தயாரிப்பாளர்கள், ஜிஎஸ்டி அதிகாரப்பூர்வமாக வருவதற்கு முன்பாகவே, பிரதானமான கார் மற்றும் பைக் தயாரிப்பாளர்களும், தமது தயாரிப்புகளின் விலைகளை ஜிஎஸ்டிக்கு ஏற்ப மாற்றியமைத்து வருகின்றனர். இது ஜூன் மாதத்தின் இறுதிவரை பின்பற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. லக்ஸூரி கார் தயாரிப்பாளர்களைத் தொடர்ந்து, மற்ற கார் & பைக் தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கும் விலைக்குறைப்பு பின்வருமாறு;
 
 
பஜாஜ் ஆட்டோ:
 
 
 
 
இந்தியாவில் பைக் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் முதல் ஆளாக, ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும் முன்பே, விலைக்குறைப்பைக் கொண்டு வந்த முதல் நிறுவனம் என்ற பெருமை, பஜாஜையே சேரும்! அதற்கேற்ப தான் விற்பனை செய்யும் விலை குறைந்த மாடலான CT100B தொடங்கி விலை அதிகமான மாடலான டொமினார் D400 பைக் வரை, அவற்றின் எக்ஸ் ஷோரூம் விலைகளில் 686 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை, மாடலுக்கு ஏற்ப விலைக்குறைப்பைப் பட்டியலிட்டுள்ளது பஜாஜ்.
 
CT100B - 686 ரூபாய்
பிளாட்டினா - 1,120 ரூபாய்
டிஸ்கவர் 125 - 1,265 ரூபாய்
V15 - 1,552 ரூபாய்
பல்ஸர் 150 - 1,917 ரூபாய்
அவென்ஜர் 220 - 2,138 ரூபாய்
 
 
ஆடி இந்தியா:
 
 
 
 
 
வழக்கமான ஃபைனான்ஸ் & இன்சூரன்ஸ் ஆஃபர், சர்வீஸ் பேக்கேஜ்கள் தவிர, A3, A4, A6, Q3 ஆகிய கார்களின் விலைகளையும் ஜிஎஸ்டிக்கு ஏற்ப மாற்றியமைத்திருக்கிறது ஆடி. இந்நிறுவனத்தின் மற்ற மாடல்களிலும் விலைக்குறைப்பு இருக்கிறது என்றாலும், முன்னே சொன்னவை அனைத்தும் ஆடியின் டாப் செல்லிங் மாடல்கள் என்பதால், அவற்றின் எக்ஸ் ஷோரூம் விலையில் மட்டும் எவ்வுளவு விலைக்குறைப்பு (8-14%) செய்யப்பட்டுள்ளது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
A3 Premium Plus TDI - 2.31 லட்ச ரூபாய்
A4 Technology TDI - 6.31 லட்ச ரூபாய்
A6 Technology TDI - 7.26 லட்ச ரூபாய்
Q3 Premium TDI - 3.71 லட்ச ரூபாய்
A8 Premium Plus - 10 லட்ச ரூபாய்
 
 
இசுஸூ இந்தியா:
 
 
 
 
''ஜெர்மன் லக்ஸூரி நிறுவனங்கள் மட்டும்தான் விலையைக் குறைக்குமா? நாங்களும் செய்வோம்ல'' என்ற ரிதியில், ஜப்பானைச் சேர்ந்த இசுஸு நிறுவனம், தான் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யும் கார்களின் விலைகளை, ஜிஎஸ்டிக்கு ஏற்ப மாற்றியுள்ளது. இதுபற்றி எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வராவிட்டாலும், ஒருசில டீலர்கள் பிக்-அப் வாகனமான D-Max V-Cross-ன் எக்ஸ் ஷோரூம் விலையில் 71 ஆயிரம் ரூபாயும், MU-X எஸ்யூவியின் 2 வீல் டிரைவ் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலையில் 1.5 லட்ச ரூபாயும், 4 வீல் டிரைவ் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலையில் 2 லட்ச ரூபாயும் குறைத்திருக்கிறார்கள்.
 
 
பிஎம்டபிள்யூ & ஜாகுவார் லேண்ட்ரோவர்:
 
 
 
 
 
இந்த இருநிறுவனங்களும் ஏற்கனவே விலைக்குறைப்பை அறிவித்து விட்டாலும், கூடுதலாக சில தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. அதன்படி பார்த்தால், பிஎம்டபிள்யூவின் 3 சீரிஸ் காரின் விலைக்குறைப்பு, வேரியன்ட்டுக்கு ஏற்ப 50 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்குகிறது. இதுவே ஜாகுவார் நிறுவனம், தனது XE காரின் எக்ஸ் ஷோரூம் விலையில் 2 - 5.7 லட்ச ரூபாயும், XE காரின் எக்ஸ் ஷோரூம் விலையில் 2 - 5.7 லட்ச ரூபாயும், XJ காரின் எக்ஸ் ஷோரூம் விலையில் 4 - 10.9 லட்ச ரூபாயும், ரேஞ்ச் ரோவர் இவோக் காரின் எக்ஸ் ஷோரூம் விலையில் 3.3 - 7.5 லட்ச ரூபாயும் முன்பைவிடக் குறைந்திருக்கிறது.
 
 
ஃபோர்டு இந்தியா:
 
 
 
 
ஒருபுறம் லக்ஸூரி கார் தயாரிப்பாளர்கள், ஜிஎஸ்டிக்கு ஏற்ப விலைக்குறைப்பு செய்து வரும் நிலையில், பட்ஜெட் செக்மென்ட்டில் முதல் ஆளாக விலைக்குறைப்பை அறிமுகப்படுத்தி இருப்பது ஃபோர்டுதான்! எனவே ஹேட்ச்பேக்கான ஃபிகோ மற்றும் காம்பேக்ட் செடான் காரான ஆஸ்பயர் காரின் எக்ஸ் ஷோரூம் விலையில், வேரியன்ட்டுக்கு ஏற்ப 10 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்திருக்கிறது. இதுவே காம்பேக்ட் எஸ்யூவியான எக்கோஸ்போர்ட் என்றால், அதன் எக்ஸ் ஷோரூம் விலையில், வேரியன்ட்டுக்கு ஏற்ப 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் பிரிமியம் கார்களான எண்டேவர் மற்றும் மஸ்டாங் ஆகியவற்றில், இதுவரை எவ்விதமான விலைகுறைப்பும் அறிவிக்கப்படவில்லை. 
 
 
 
 
ராயல் என்ஃபீல்டு:  நாளை முதலாக, தான் விற்பனை செய்யும் ஒவ்வொரு பைக்கின் ஆன் ரோடு விலையிலும், ஜிஎஸ்டிக்கு ஏற்ப விலைக்குறைப்பைச் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் President ஆக இருக்கும் ருத்ரதேஜ் சிங்!
 
 
மஹிந்திரா:
 
 
 
 
இந்தியாவில் யுட்டிலிட்டி வாகன விற்பனையில் முன்னணி வகிக்கும் மஹிந்திரா, ஜிஎஸ்டிக்கு ஏற்ப தனது எஸ்யூவிகளின் விலைகளை மாற்றியிருக்கிறது. இதனால் KUV 1OO காரின் விலையில் 42 ஆயிரம் ரூபாயும், TUV 3OO காரின் விலையில் 36 ஆயிரம் ரூபாயும், XUV 5OO காரின் விலையில் 65 ஆயிரம் ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் சில மாடல்களில் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகிறது. 
 
 
ஹூண்டாய் இந்தியா:
 
 
 
 
இந்தியாவில் டூஸான் தவிர்த்து, தான் தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து கார்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ், 100% ஃபைனான்ஸ் வசதி ஆகியவற்றுடன், ஜிஎஸ்டிக்கு ஏற்ப விலைக்குறைப்பையும் செய்திருக்கிறது ஹூண்டாய். அவை பின்வருமாறு;
 
இயான்: 45 ஆயிரம் ரூபாய்
கிராண்ட் i10 - 62 ஆயிரம் ரூபாய் (பெ) & 73 ஆயிரம் ரூபாய் (டீ)
எக்ஸென்ட் - 25 ஆயிரம் ரூபாய் (பெட்ரோல்/டீசல்)
எலீட் i20 - 25 ஆயிரம் ரூபாய் (பெட்ரோல்/டீசல்)
வெர்னா - 80 ஆயிரம் ரூபாய் (பெ) & 90 ஆயிரம் ரூபாய் (டீ)
சான்டா ஃபி - 2.5 லட்ச ரூபாய்  
 
 
- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   BAJAJ AUTO, ROYAL ENFIELD, AUDI INDIA, ISUZU INDIA, BMW, JLR, FORD INDIA, MAHINDRA, HYUNDAI INDIA, GST, DISCOUNTS, BENEFITS.