42,499 ரூபாயில், ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர் - CLIQ!
Posted Date : 15:06 (23/06/2017)Last updated : 15:06 (23/06/2017)

 

 

ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் பொறுத்தவரை, எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென புதிய தயாரிப்புகளைக் களமிறக்குவதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட்! தற்போது அந்த வித்தையைக் கையில் எடுத்திருப்பது ஹோண்டா. தனது புதிய தயாரிப்பைப் பற்றிய டெக்னிக்கல் விபரங்களோ, ஸ்பை ஃபோட்டோக்களோ இதுவரை கிடைக்கப்பெறாத அளவுக்கு, அதனை ரகசியமாக டெஸ்ட் செய்தது மட்டுமல்லாது, சர்ப்ரைஸாகவும் அறிமுகம் செய்து அசத்தியிருக்கிறது ஹோண்டா;
 
 
 
 
CLIQ எனப் பெயரிடப்பட்டுள்ள இது, ஆக்டிவாவைப் போலவே, 110சிசியில் ஒரு சிட்டி கம்யூட்டர் வகை ஸ்கூட்டராகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அதன் டிசைன், நவியைப் போலவே வித்தியாசமாக இருக்கிறது. சிறுநகரங்கள் மற்றும் புறநகரங்களை மனதில் வைத்து, அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில், 4 கலர்களில் கிடைக்கக்கூடிய கூடிய ஸ்கூட்டராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது CLIQ. இருபாலருக்கும் ஏற்றதாக இருக்கும் இதன் எடை, வெறும் 102 கிலோதான்!
 
 
 
 
டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையான 42,499 ரூபாய்க்குக் கிடைக்கும் இந்த ஸ்கூட்டரில் இருப்பது, ஆக்டிவாவில் இருக்கும் அதே 109சிசி இன்ஜின்தான்! இதன் பெட்ரோல் டேங்க், வெறும் 3.5 லிட்டர்தான் என்பது நெருடல்! ஆனால் நீளமான சீட், கால் வைக்க அதிக இடம், சீட்டுக்கு அடியில் ஸ்டோரேஜ் எனப் பிராக்டிக்கலாகவும் இருக்கிறது CLIQ. வசதிகளைப் பொறுத்தவரை ட்யூப்லெஸ் டயர்கள்,  MF பேட்டரி, Viscous ஏர் ஃபில்டர், USB மொபைல் சார்ஜர், CBS, செல்ஃ ஸ்டார்ட் ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது.
 
 - ராகுல் சிவகுரு.