சூப்பர் பைக் நிறுவனமான டுகாட்டியை வாங்குகிறதா பஜாஜ்?
Posted Date : 12:06 (26/06/2017)Last updated : 12:06 (26/06/2017)

 

கடந்த செப்டம்பர் 2015-ல், உலகளவின் தனது கார்களின் மாசு அளவுகளில் மோசடி செய்திருந்தது ஃபோக்ஸ்வாகன். இதனால் இவர்களின் இன்ஜின்களைப் பயன்படுத்திய அதன் குழும நிறுவனங்களான ஆடி, ஸ்கோடா, சியட், ஃபோர்ஷே ஆகியோரும் இதனால் பாதிக்கப்பட்டது அறிந்ததே.

இந்தப் பிரச்னையால் பல பில்லியன் டாலர்களை அபராதமாகவும்; லட்சக்கணக்கான கார்களைச் சரிசெய்வதற்காக, அவற்றை ரீ-கால் செய்ததற்கான செலவுகள் என ஃபோக்ஸ்வாகன் பயங்கர நஷ்டமடைந்துவிட்டது. இதனைச் சீர்செய்யும் விதமாக, தன்வசம் இருக்கக்கூடிய லாபகரமான நிறுவனங்களில் ஒன்றான டுகாட்டியை, விற்பனை செய்ய உள்ளது அந்நிறுவனம்!

 

 

மேலும் தனது இமேஜை உயர்த்தும் நோக்கத்தில், வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களைக் களமிறக்கும் முடிவில் ஃபோக்ஸ்வாகன் இருக்கிறது. ஹீரோ மோட்டோகார்ப், ராயல் என்ஃபீல்டு, ஹார்லி டேவிட்சன் ஆகியோர், இந்த இத்தாலிய சூப்பர் பைக் தயாரிப்பாளரை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்த நிலையில்,

அந்த பட்டியலில் தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் இணைந்திருக்கிறது. ஆனால் இதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, மேலே சொன்ன எந்த நிறுவனமும் இதுவரை வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.

 

- ராகுல் சிவகுரு.