3 நாட்களில் - 1,000 புக்கிங்! அசத்தும் ஜீப் காம்பஸ்!
Posted Date : 14:06 (27/06/2017)Last updated : 14:06 (27/06/2017)

 

 

தனது காம்பஸ் எஸ்யூவியின் புக்கிங்கை, ஜீப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து விட்டது எனக் கடந்த வாரம் சொல்லியிருந்தோம். ஆட்டோமொபைல் துறையின் நிபுணர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த எஸ்யூவி, இந்நிறுவனத்தின் முதல் 'Made in India' தயாரிப்பு என்ற பெருமைக்குச் சொந்தக்கா(ர)ர் என்பது கவனிக்கத்தக்கது. அதற்கேற்ப காம்பஸில் இருக்கும் 80% உதிரிபாகங்கள், உள்நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளன. ஃபியட் க்ரைஸ்லர் நிறுவனத்துக்குச் சொந்தமான ரஞ்சன்கவுனில் இருக்கும் தொழிற்சாலையில் இது தயாரிக்கப்படுகிறது.
 
மேலும் ஜப்பான், தென் ஆப்ரிக்கா, பிரிட்டன் ஆகிய உலக நாடுகளுக்கும், இங்கிருந்து கார்கள் விரைவில் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புக்கிங் ஆரம்பிக்கப்பட்ட 3 நாட்களிலேயே, 1,000 புக்கிங்கை எட்டியிருக்கிறது காம்பஸ்! ஆக மக்களிடமும் நல்ல அபிமானத்தை, இந்த எஸ்யூவி பெற்றிருப்பது தெரிகிறது.
 
 
 
 
ஜீப்பின் இணையதளம் மற்றும் டீலர்களில், 50 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி, 5 வேரியன்ட் (Sport, Longitude, Longitude (O), Limited, Limited (O)) மற்றும் 5 கலர்களில் பிடித்தமானதை புக் செய்ய முடியும்; பெட்ரோல்/டீசல் இன்ஜின், 2 வீல் டிரைவ்/4வீல் டிரைவ், மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் எனப் பல ஆப்ஷன்களில் கிடைக்கும் காம்பஸ், முதற்கட்டமாக 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் (170bhp/35kgm) -  6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் செட்-அப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அனைத்து வேரியன்ட்டிலும் பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. டீசலில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலும், 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (160bhp/25kgm) கொண்ட மாடலும், ஒன்றன்பின் ஒன்றாக பின்னர் வெளி வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! 
 

- ராகுல் சிவகுரு.