ஜாகுவார் XF, ஆடி A6, வால்வோ S90, மெர்சிடீஸ் பென்ஸ் E-class LWB ஆகிய கார்களுக்குப் போட்டியாக, Sport Line - Luxury Line - M-Sport எனும் 3 வேரியன்ட்களில், 8 வண்ணங்களில்,  49.90 - 61.30 லட்சத்தில் (ஜிஎஸ்டிக்குப் பிந்தைய எக்ஸ் ஷோரூம் விலை), பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ், இன்று அசத்தலாக அறிமுகமானது. இதில் 1 பெட்ரோல் மற்றும் 2 டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 530i Sport Line எனும் ஒரே வேரியன்ட்டில் மட்டுமே, 252bhp பவர் - 35kgm டார்க் - 15.56kmpl - அராய் மைலேஜ் - 6.2 விநாடிகளில் 0 - 100கிமீ வேகத்தை எட்டக்கூடிய 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல் கிடைப்பது கவனிக்கத்தக்கது.
 
 
 
 
520d Sport Line &520d Luxury Line எனும் 2 டீசல் வேரியன்ட்களில் இருப்பது, 190bhp பவர் - 40kgm டார்க் - 22.48kmpl அராய் மைலேஜ் - 7.5 விநாடிகளில் 0 - 100கிமீ வேகத்தை எட்டக்கூடிய 2.0 லிட்டர்,  4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின். இதுவே ஸ்பெஷலான Aero Kit, Sports Transmission, அகலமான 275/40 R18 டயர்கள் பொருத்தப்பட்ட டாப் வேரியன்ட்டான 530d M Sport என்றால், 256bhp பவர் - 62kgm டார்க் - 18.59kmpl அராய் மைலேஜ் - 5.7 விநாடிகளில் 0 - 100கிமீ வேகத்தை எட்டக்கூடிய 3.0 லிட்டர், 6 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. பின்பக்கச் சக்கரங்களுக்குப் பவரைச் செலுத்தக்கூடிய இந்த மூன்று இன்ஜின்களும், Paddle Shifters கொண்ட 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. 
 
 
 
 
காரின் அதிக மைலேஜிற்கு, அதன் 0.22 Drag Co-Efficient துணை நிற்கிறது. அனைத்து வேரியன்ட்டிலும், ஒவ்வொரு வீலுக்கும் தனியாக Damping வசதியுடன் கூடிய Adaptive Suspension மற்றும் எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள் இருப்பது பெரிய ப்ளஸ். முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, தொழில்நுட்ப ரீதியில் பலமடங்கு முன்னேறியிருக்கிறது, 2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ். 
 
 
 
 
காரில் இருக்கக்கூடிய Adaptive LED ஹெட்லைட் - டெயில் லைட், 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், Gesture Control வசதியுடன் கூடிய 10.25 இன்ச் டிஸ்பிளே கொண்ட iDrive சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 360 Degree பார்க்கிங் கேமரா, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ரிமோட் பார்க்கிங் வசதி, 600W Harman Kardon ஆடியோ சிஸ்டம், இரட்டை எக்ஸாஸ்ட் பைப், Heads-Up டிஸ்பிளே, ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்-ஸ்டாப், ஆட்டோ பிரேக்கிங் உடனான க்ரூஸ் கன்ட்ரோல், Brake Energy Regeneration, Active Air Kidney க்ரில், Launch Control, டிரைவிங் மோடுகள் (Comfort, Sport, Sport+, Eco Pro, Adaptive) போன்ற சிறப்பம்சங்களை, இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். Ebony & Beige டேஷ்போர்டு, Wood - Piano Black - லெதர் ஃப்னிஷ் உடனான கேபினில் முன்பைவிட அதிக ஸ்டோரேஸ் ஸ்பேஸ் இருப்பதுடன், பூட் ஸ்பேஸும் 530 லிட்டராக அதிகரித்திருக்கிறது. 
 
 
 
 
பிஎம்டபிள்யூவின் லேட்டஸ்ட்டான Cluster Architecture ஃப்ளாட்ஃபார்மில்தான், புதிய 5 சீரிஸ் காரும் தயாரிக்கப்படுகிறது. எனவே முந்தைய மாடலைவிட அளவுகளில் மாற்றம் இருந்தாலும் (36மிமீ கூடுதல் நீளம், 6 மிமீ கூடுதல் அகலம், 2மிமீ கூடுதல் உயரம், 7 மிமீ கூடுதல் வீல்பேஸ், 18 இன்ச் அலாய் வீல்), புதிய மாடல் அதைவிட 70 - 100 கிலோ வரை எடை குறைவாக இருக்கிறது. புதிய 5 சீரிஸின் கட்டுமானத்தில் அலுமினியம் மற்றும் High Strength ஸ்டீல் பயன்படுத்தப்பட்டிருப்பதும் ஒரு காரணம். மேலும் காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில், 7 சீரிஸின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
 
 
 
 
எனவே ஸ்டைலான டிசைன், லக்ஸூரியான கேபின், ஸ்போர்ட்டியான ஓட்டுதல் ஆகியவற்றை முன்னிருத்தி, தனது புதிய 5 சீரிஸ் காரை, ஒரு மினி 7 சீரிஸ் போல பிஎம்டபிள்யூ தயாரித்திருப்பது தெரிகிறது. CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்து, காரைச் சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுவதாலேயே, அசத்தலான விலையில் புதிய 5 சீரிஸ் காரைக் களமிறக்க, பிஎம்டபிள்யூவால் முடிந்திருக்கிறது. பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை பிரேக் அசிஸ்ட் உடனான ABS, DSC, DTC, CBC, HDC, ரன் ஃப்ளாட் டயர்கள், எமர்ஜென்சி ஸ்பேர் வீல், க்ராஷ் சென்சார், Electronic Vehicle Immobiliser, Side-Impact Protection எனப் பட்டியல் நீள்கிறது! 
 
 
 
 
இந்த காரின் ஜிஎஸ்டிக்குப் பிந்தைய எக்ஸ் ஷோரூம் விலைகள் பின்வருமாறு;
 
BMW 530i Sport Line: INR 49.90 lakh
 
BMW 520d Sport Line: INR 49.90 lakh
 
BMW 520d Luxury Line: INR 53.60 lakh
 
BMW 530d M Sport: INR 61.30 lakh
 
 
 - ராகுல் சிவகுரு.