தனது டூ-வீலர்களின் விலைகளைக் குறைத்தது யமஹா! #gstrollout #yamaha
Posted Date : 17:00 (04/07/2017)
Last Updated : 17:07 (04/07/2017)

 
ஜிஎஸ்டி... ஜூலை 1, 2017 முதலாக அமலுக்கு வந்துவிட்டது; எனவே இதுவரை டூ-வீலர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளில் (30.2%) மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 350சிசிக்கும் குறைவான டூ-வீலர்களுக்கு 28% வரியும், 350சிசிக்கும் அதிகமான டூ-வீலர்களுக்கு 31% (28% GST+3%CESS) வரியும் இனி பின்பற்றப்படும். இதனால் கம்யூட்டர்/என்ட்ரி லெவல் பெர்ஃபாமென்ஸ்/ஸ்கூட்டர் ஆகிய டூ-வீலர் செக்மென்ட்களில் இருக்கும் தயாரிப்புகளின் விலை குறைந்திருக்கிறது! ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம், இந்தியாவில் 350சிசிக்கும் குறைவான டூ-வீலர்களையே (இறக்குமதி செய்யப்படும் சூப்பர் பைக்குகளைத் தவிர) தயாரித்து விற்பனை செய்கிறது என்பதால், அவற்றின் மீது 28% வரிதான் விதிக்கப்பட்டிருக்கிறது.
 
 
 
 
''One Nation, One Market, One Tax பாணியிலான ஜிஎஸ்டி வரியை மகிழ்ச்சியாக வரவேற்கிறோம். Demonetization/BS-IV போன்ற இடர்பாடுகளைத் ஆகியவற்றைத் தொடர்ந்து, ஜிஎஸ்டியினால் சுமார் 10% வளர்ச்சியை ஆட்டோமொபைல் துறை எட்டும்'' என இந்நிறுவனத்தின் சேல்ஸ் & மார்க்கெட்டிங் பிரிவின் துணைத் தலைவர் ராய் குரியன் கூறியுள்ளார். FZ25-யைத் தொடர்ந்து, ஃபுல் ஃபேரிங் கொண்ட Fazer 250 & Nozza Grande எனும் 125சிசி ஸ்கூட்டரை, இந்தாண்டில் களமிறக்கும் முடிவில் இருக்கிறது யமஹா! ஜிஎஸ்டிக்கு ஏற்ப மாற்றப்பட்ட தமிழக எக்ஸ் ஷோரூம் விலைகள் பின்வருமாறு;
 

 
 
Yamaha Motorcycles - Model Lineup

YZF-R15 VER 2.0 - 118838
YZF-R15 S - 115746
FZ 25 - 120335
FZ-S FI - 83042
FZ-S FI (Matt Green) - 84012
FZ FI - 81040
Fazer FI - 88143
SZ-RR VER 2.0 - 67803
SZ-RR VER 2.0 (Matt Green) - 68803
Saluto 125 (Drum) - 55544
Saluto 125 (Disc) - 58010
Saluto 125 (Matt green - drum) - 56528
Saluto 125 (Matt Green - disc) - 58990
Saluto RX - 47510
 

 
 
Yamaha Scooters - Model Lineup

Fascino - 56191
Cygnus Ray ZR (Drum) - 54553
Cygnus Ray ZR (Disc) - 57000
 Cygnus Ray Z - 51919
Cygnus Alpha (Drum) - 53332
Cygnus Alpha (Disc) - 56592
 

 - ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   YAMAHA, INDIA, CBU, CKD, LOCAL ASSEMBLY, JAPAN, BIKES, SCOOTERS, SUPERBIKES, PETROL, FZ25, YZF-R15, SALUTO, ALPHA, RAY-ZR, SZ-RR