ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை குறைந்தது ! #gstrollout #RoyalEnfield
Posted Date : 17:59 (06/07/2017)
Last Updated : 18:06 (06/07/2017)

 

பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பதிலாக, ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை 1, 2017 முதலாக நாடு முழுவதும் அமலுக்கு வந்துவிட்டது! எனவே இதுவரை டூ-வீலர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி அமைப்பில் (30.2%) மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 350சிசிக்கும் குறைவான டூ-வீலர்களுக்கு 28% வரியும், 350சிசிக்கும் அதிகமான டூ-வீலர்களுக்கு 31% (28% GST + 3% CESS) வரி விகிதம் இனிமேல் பின்பற்றப்பட உள்ளது. இதனால் கம்யூட்டர்/என்ட்ரி லெவல் பெர்ஃபாமென்ஸ்/ஸ்கூட்டர் போன்ற மாஸ் மார்க்கெட் டூ-வீலர் செக்மென்ட்களில் இருக்கும் 350சிசிக்கும் குறைவான மாடல்களின் விலை கணிசமாகக் குறைந்திருக்கிறது!
 
 
 
 
தற்போது யமஹாவைத் தொடர்ந்து, ராயல் என்ஃபீல்டு நிறுவனமும், தனது டூ-வீலர்களின் விலைகளை, ஜி.எஸ்.டிக்கு ஏற்ப மாற்றியிருக்கிறது. இதில் எதிர்பார்த்தபடியே, 350சிசிக்கு உட்பட்ட மாடல்களின் விலைகள் முன்பைவிடக் குறைந்தும், 350சிசிக்கும் அதிகமான மாடல்களின் விலைகள் முன்பைவிட அதிகமாகியும் இருக்கின்றன! புல்லட் சீரிஸில் இருக்கும் 350சிசி பைக்கான எலெக்ட்ராவின் விலை, அதிகபட்சமாக 2,211 ரூபாய் குறைந்துள்ளது;
 
இதுவே 411சிசி இன்ஜின் கொண்ட ஹிமாலயன் பைக்கின் விலை, அதிகபட்சமாக 2717 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆனால் பொதுவாகவே, டூ-வீலர்களின் ரெஜிஸ்டரேஷன் மற்றும் காப்பிட்டுத் தொகை விலைகளும் அதிகரித்துள்ளதால், இந்த விலை வீழ்ச்சியின் பலன், வாடிக்கையாளர்களுக்குப் பெரியளவில் சேமிப்பைத் தரவில்லை என்பதே, பலரது கருத்தாக இருக்கிறது. இந்த ஆண்டில் புதிய கலர் ஆப்ஷன்கள் மற்றும் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப தனது பைக்குகளை அப்டேட் செய்ததைத் தவிர, இந்தாண்டில் எந்தவொரு புதிய தயாரிப்பையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை.
 
 
 
 
இடையே இத்தாலிய சூப்பர்பைக் நிறுவனமான டுகாட்டியை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வாங்கப்போவதாகவும், குறைவான விற்பனை காரணமாக ஹிமாலயன் பைக்கின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் பரவியது அறிந்ததே. ஆனால் தற்போது இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் இருக்கும் ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட கான்டினென்ட்டல் ஜிடி 750 மற்றும் ஹிமாலயன் பைக்கின் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் பொருத்தப்பட்ட மாடல்கள், விரைவில் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! ஜி.எஸ்.டிக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் சென்னை ஆன்ரோடு விலைப் பட்டியல் பின்வருமாறு; 

புல்லட் 350 - ரூ. 126,264 (1,661 ரூபாய் குறைவு)
புல்லட் எலெக்ட்ரா 350 - ரூ. 141,670 (2,211 ரூபாய் குறைவு)
க்ளாஸிக் 350 - ரூ. 150,882 (2,015 ரூபாய் குறைவு)
தண்டர்பேர்டு 350 - ரூ. 162,431 (2,165 ரூபாய் குறைவு)
 
 
 
 
க்ளாஸிக் 500 - ரூ. 195,556 (1490 ரூபாய் அதிகம்)
க்ளாஸிக் Desert Storme 500 - ரூ. 198,808 (1635 ரூபாய் அதிகம்)
க்ளாஸிக் க்ரோம் 500 - ரூ. 207,379 (1477 ரூபாய் அதிகம்)
தண்டர்பேர்டு 500 - ரூ. 209,078 (1359 ரூபாய் அதிகம்)
புல்லட் 500 - ரூ. 184,682 (1169 ரூபாய் அதிகம்)
 
கான்டினென்ட்டல் GT 535 - ரூ. 231,637 (301 ரூபாய் அதிகம்)
ஹிமாலயன் 411 - ரூ. 184,154 (2717 ரூபாய் அதிகம்)  
 

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   ROYAL ENFIELD, INDIA, CLASSIC, THUNDERBIRD, HIMALAYAN, BULLET, ELECTRA, CONTINENTAL GT, 350CC, 500CC, BS-IV, GST, PETROL.