2.5 லட்சம் சிட்டி கார்களை விற்பனை செய்தது ஹோண்டா!
Posted Date : 14:57 (10/07/2017)
Last Updated : 15:01 (10/07/2017)

 

ஹோண்டா சிட்டி... ஹேட்ச்பேக் கார்களில் இருந்து அப்டேட் ஆக விருப்பப்படுபவர்களின் முதல் சாய்ஸ், இந்தக் காராகத்தான் இருக்கும்! தற்போது இந்தியாவில் இந்த காரின் நான்காம் தலைமுறை மாடல் விற்பனை செய்யப்படும் நிலையில், இது மட்டும் 2.5 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது! இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை, இந்தாண்டில் ஹோண்டா அறிமுகப்படுத்தியது அறிந்ததே. அதில் உள்ள CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட்டை,
 
 
 
 
சுமார் 30% வாடிக்கையாளர்கள் இதுவரை தேர்ந்தெடுத்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும், அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலிலும், தனக்கென ஒரு நிலையான இடத்தை இந்த கார் பிடித்துவருகிறது. ஆக மிட் சைஸ் செடான் செக்மென்ட்டின் ராஜாவாகத் திகழ்ந்துவரும் ஹோண்டா சிட்டி, இதுவரை 6.8 லட்சத்துக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது. தவிர 60 உலக நாடுகளில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் மாதாந்திர விற்பனை எண்ணிக்கையில் 25%, இந்தியாவில் இருந்து வருவதாக ஹோண்டா தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. 
 

 - ராகுல் சிவகுரு.  
 
 
 
TAGS :   HONDA, CITY, INDIA, SEDAN, MID SIZE, HYUNDAI VERNA, MARUTI SUZUKI CIAZ, SKODA, RAPID, FIAT, LINEA, VOLKSWAGEN, VENTO, DIESEL, PETROL, MT, AT, 4 CYLINDER.