60 லட்சத்துக்கு அறிமுகமானது வால்வோ V90 Cross Country!
Posted Date : 14:34 (13/07/2017)
Last Updated : 14:40 (13/07/2017)


 

V40 Cross Country மற்றும் S60 Cross Country ஆகியவற்றைத் தொடர்ந்து, Cross Country மாடல் வகையில் மூன்றாவதாக V90 Cross Country காரை, 60 லட்ச ரூபாய்க்கு (எக்ஸ் ஷோரூம் விலை) வால்வோ அறிமுகப்படுத்தியது. S90 செடானை அடிப்படையாகக் கொண்டு இது தயாரிக்கப்பட்டிருந்தாலும், மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க - பின்பக்க பம்பர்கள், பக்கவாட்டில் பாடி கிளாடிங், ரூஃப் ரெயில்கள் ஆகியவற்றால்,
 
அதைவிட வித்தியாசமான தோற்றத்தைப் பெற்றிருக்கிறது  V90 Cross Country. மேலும் 20 இன்ச் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், S90 செடானைவிட இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 60மிமீ உயர்ந்திருக்கிறது (அதாவது 210மிமீ)! இதனுடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் - ஏர் சஸ்பென்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளதால், சொகுசான பயணத்துக்கும் - ஆஃப் ரோடிங்கிற்கும் கார் ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கலாம்.
 
 
 
 
V90 Cross Country காரில், XC90 எஸ்யூவியில் இருக்கும் 235bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய D5 டீசல் இன்ஜின் -  8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணியைப் பொருத்தியுள்ளது வால்வோ. 560 பூட் ஸ்பேஸ் உங்களுக்குப் போதவில்லை என்றால், பின்பக்க இருக்கைகளை மடக்கும்போது, 1,526 லிட்டராக பூட் ஸ்பேஸ் அதிகரித்துவிடுகிறது! இதுதவிர  12.3 இன்ச் டிரைவர் டிஸ்பிளே, Nappa லெதர் உள்ளலங்காரம்,
 
சீட் மெமரி - எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட் வசதியுடன் கூடிய முன்பக்க இருக்கைகள், 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, பனரோமிக் சன்ரூஃப் என சிறப்பம்சங்களின் பட்டியல் நீள்கிறது; வால்வோ கார் என்றாலே பாதுகாப்பு வசதிகள் இல்லாமலா? முன்பக்க Collision Mitigation Support, முன்பக்க - பின்பக்க கேமராக்களுடன் கூடிய பார்க் அசிஸ்ட், எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட்,  Lane Keeping ஆகியவை இருப்பது ப்ளஸ். 
 

- ராகுல் சிவகுரு. 
 
 
TAGS :   VOLVO, S90, V90, CROSS COUNTRY, NAPPA LEATHER, BODY CLADDING, ROOF RAILS, LED, TOUCH SCREEN DISPLAY, INDIA, STATION WAGON, ALL WHEEL DRIVE, 20 INCH ALLOY WHEELS, DIESEL, D5, 235BHP, 8 SPEED AUTOMATIC GEARBOX,4 CYLINDER