ஜூலை 25 அன்று வருகிறது பெனெல்லி 302R!
Posted Date : 18:35 (20/07/2017)
Last Updated : 18:42 (20/07/2017)

 

 

 
தான் விற்பனை செய்யும் நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான TNT 300 பைக்கை அடிப்படையாகக் கொண்டு, 302R எனும் ஃபுல் பேரிங் உடனான 300சிசி பைக்கை வடிவமைத்திருக்கிறது பெனெல்லி. 2015-ல் மிலனில் நடைபெற்ற EICMA மோட்டார் ஷோ மற்றும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட இந்த பைக்கை, வருகின்ற ஜூலை 25, 2017 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது பெனெல்லி.
 
இதில் TNT 300 பைக்கில் இருக்கும் அதே BS-IV, 300சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஸ்டீல் ட்யுப் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் - பாக்ஸ் செக்‌ஷன் ஸ்விங்ஆர்ம், மாற்றியமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் செட்-அப், ஏபிஎஸ் பிரேக்ஸ், 17 இன்ச் METZELER டயர்கள் எனப் புதிய விஷயங்கள் இருப்பதும் கவனிக்கத்தக்கது. எனவே வேகமாகச் செல்லும்போது, முகத்தில் காற்று அறைவதை தடுக்கக்கூடிய ஃபுல் ஃபேரிங் இடம்பெற்றிருந்தாலும்,
 
 
 
 
TNT 300 பைக்கைவிடச் சுமார் 15 கிலோ எடை குறைவான பைக்காக (180 கிலோ) இருக்கிறது 302R. ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்காகப் பொசிஷன் செய்யப்பட உள்ள இந்த பைக்கின் புக்கிங் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், இது வாடிக்கையாளர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக, DSK மோட்டோ வீல்ஸ் நிறுவனத்தின் சேர்மன் சிரிஷ் குல்கர்னி கூறியுள்ளார். தவிர ஹேண்டில் பார் சற்று தாழ்வாகவும், சீட்டின் உயரம் 790மிமி மற்றும்
 
கிரவுண்ட் கிளியரன்ஸ் 180மிமி என இருப்பதால், முதன்முறையாக பைக் ஓட்டுபவர்களுக்கும் பைக்கைக் கையாள்வது எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. TNT 300 பைக்கின் சென்னை ஆன்ரோடு விலையே, 3.68 லட்சத்தைத் தொடும்போது, இதன் சென்னை ஆன்ரோடு விலை 4 லட்ச ருபாயாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்!  
 
 
- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   JEEP COMPASS, BENELLI 302R, SPORTS TOURER, SUV, INDIA, BOOKING, DEALERS, OFF ROADING, HIGHWAY, FULL FAIRING, ABS, LAUNCH, PETROL, DIESEL, MANUAL GEARBOX, PREMIUM POSITION.