ஜூலை 26 அன்று வருகிறது, டட்ஸன் ரெடி-கோ 1.0 லிட்டர் மாடல்!
Posted Date : 21:07 (21/07/2017)Last updated : 21:07 (21/07/2017)


 

 

மாருதி சுஸூகி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் ஆகிய கார்களுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட டட்ஸன் ரெடி-கோ, விற்பனைக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துவிட்டது. எனவே ரெனோ க்விட்டைப் போலவே, ரெடி-கோவின் 1.0 லிட்டர் மாடலை, வருகின்ற ஜூலை 26, 2017 அன்று, T (O) & S எனும் இரு வேரியன்ட்களில் களமிறக்குகிறது டட்ஸன். இன்ஜினைத் தாண்டி, காரின் தோற்றம், சிறப்பம்சங்கள், மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. ஆனால் முன்பைவிடச் சற்றே பெரிய இன்ஜின் காரணமாக, 800சிசி மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த காரின் எடை 30 கிலோ (கெர்ப் வெயிட் - 680 கிலோ) அதிகரித்திருக்கிறது;
 
 
 
 
மேலும் கேபினும், முழுக்க கறுப்பு நிறத்துக்கு மாறியிருக்கிறது. தவிர AMT ஆப்ஷனும் உடனடியாகக் கிடைக்காது என்பதால், அசத்தலான விலையில் ரெடி-கோ 1.0 வெளிவருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! இதில் பொருத்தப்பட்டுள்ள 999சிசி, 3 சிலிண்டர், i-SAT பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி, க்விட்டைப் போலவே, 68bhp பவர் - 9.1kgm டார்க் - 22.5kmpl அராய் மைலேஜை வெளிப்படுத்துகிறது. ரெடி-கோ 1.0 லிட்டர் மாடலின்  புக்கிங், டட்ஸன் டீலர்களில் ஏற்கனவே துவங்கிவிட்டது! எனவே 10 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி, பிடித்தமான கலர் மற்றும் வேரியன்ட்டில், காரை புக் செய்துகொள்ளலாம்.
 
 
- ராகுல் சிவகுரு.