டாடா நெக்ஸான் ஆரம்பம்! பிரெஸ்ஸா, எக்கோஸ்போர்ட்... Be careful!
Posted Date : 18:29 (25/07/2017)
Last Updated : 18:37 (25/07/2017)

 

 

4 மீட்டருக்கு உட்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில், தனது Impact டிசைன் கோட்பாடுகளின்படி தயாரிக்கப்பட்டிருக்கும் நெக்ஸான் எனும் ஸ்டைலான காரை, விரைவில் களமிறக்க உள்ளது டாடா மோட்டார்ஸ்; 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், முதன்முறையாகக் காட்சிபடுத்தப்பட்ட நெக்ஸான் கான்செப்ட்டின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் அகலமான க்ரில்,
 
DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட், LED டெயில் லைட், ரூஃப் ரெயில், 16 இன்ச் அலாய் வீல்கள், 200மிமீ கிரவவுண்ட் கிளியரன்ஸ் என இதன் ஆஜானுபாகுவான தோற்றம், ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவியை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா TUV 3OO போன்ற காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, நெக்ஸானைப் பொஷிசன் செய்திருக்கிறது டாடா.
 
 
 
 
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மற்றும் 2016 ஜெனிவா மோட்டார் ஷோவில், நெக்ஸானின் Prototype மாடல் காட்சிபடுத்தப்பட்டபோது, பலரையும் அது வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. காரின் வெளிப்புறத்தைப் போலவே, உட்புறமும் தரமான மெட்டீரியல்களால் ஸ்டைலான கேபினாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. பொதுவாகவே டாடாவின் தயாரிப்புகள் என்றுமே, கேபின் இடவசதியில் பின்தங்கியது இல்லை!
 
எனவே கூபே போன்ற தாழ்வான ரூஃப் லைனைக் கொண்டிருந்தாலும், உயரமானவர்களுக்கும் வசதியாக இருக்கும்படி பின்பக்க இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரியர் ஏசி வென்ட், 6.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் உடனான Harman டச் ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா என அதிக சிறப்பம்சங்கள் இருப்பதும் பெரிய ப்ளஸ்.
 
 
 
 
இந்நிறுவனத்தின் ஜெஸ்ட் மற்றும் போல்ட் ஆகியவை தயாரிக்கப்படும் அதே X1 ஃப்ளாட்ஃபார்மில்தான், நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியும் தயாரிக்கப்பட உள்ளது. இதில் 110bhp பவர் - 26kgm டார்க்கை வெளிப்படுத்தும் புதிய 1,496சிசி, 4 சிலிண்டர், Revotorq 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 110bhp பவர் - 17kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1,198சிசி, 3 சிலிண்டர், Revotron 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் எனப் புதிய பெட்ரோல்/டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள்,
 
முற்றிலும் புதிய 6 ஸ்பீடு TA6300 மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. டியாகோவின் 3 சிலிண்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்களை அடிப்படையாகக் கொண்டு, டாடா இவற்றைத் தயாரித்திருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்! மேலும் காம்பேக்ட் எஸ்யூவிகளிலே முதன்முறையாக, மல்ட்டி டிரைவிங் மோடுகளை (Eco, City, Sport) நெக்ஸானில் இருக்கிறது.
 
 
 
 
எனவே ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, லேட்டாக ஆனால் லேட்டஸ்டாக, இந்தியாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டிற்குள் நுழைந்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். எனவே போட்டியாளர்களிடமிருந்து தனித்துத் தெரிவதற்காக அதிகளவில் மெனக்கெட்டிருப்பது, காரைப் பார்க்கும்போதே புரிகிறது.
 
இந்நிலையில் மஹாராஷ்ட்ராவில் உள்ள ரஞ்சன்கவுனில் இருக்கும் டாடாவுக்குச் சொந்தமான தொழிற்சாலையில், நெக்ஸானின் உற்பத்தி துவங்கப்பட்டுவிட்டது; எனவே இந்த ஆண்டின் பண்டிகை காலத்தில் அல்லது ஆண்டு இறுதிக்குள்ளாக, தோராயமாக 8 - 12 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், இந்திய சாலைகளில் நெக்ஸான் டயர் பதிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்!  
 
 

 

     - ராகுல் சிவகுரு.

 
TAGS :   TATA MOTORS, NEXON, INDIA, COMPACT SUV, MAHINDRA, TUV 3OO, MARUTI SUZUKI, VITARA BREZZA, FOR, ECOSPORT, PETROL, DIESEL, MT, AT, TRENDING, LAUNCH, CROSSOVER.