74.8 லட்சத்துக்குக் களமிறங்கியது, மெர்சிடீஸ் GLC AMG 43 Coupe!
Posted Date : 15:10 (28/07/2017)
Last Updated : 15:23 (28/07/2017)


 

அதிரடியான பெர்ஃபாமென்ஸுக்குப் பெயர் பெற்ற AMG கார்களை, இந்தியாவில் தொடர்ச்சியாக (G63 AMG Edition 43, GLS 63 AMG) அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். தற்போது AMG கார்கள் வெளியாகி 50 வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் விதமாக, 74.8 லட்சத்துக்குக் (இந்திய எக்ஸ் ஷோரூம் விலை) களமிறங்கியிருக்கிறது GLC AMG 43 Coupe. CBU முறையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் இந்த காரில் இருப்பது, AMG 43 பேட்ஜ் கொண்ட கார்களில் (GLE 43 Coupe, SLC 43, C 43)  இருக்கும் அதே 3.0 லிட்டர், ட்வின் டர்போ, V6 பெட்ரோல் இன்ஜின்தான்;
 
367bhp பவர் - 52kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் 31% சதவிகித பவர் முன்பக்க வீல்களுக்கும், மீதமுள்ள 69% பவர் பின்பக்க வீல்களுக்கும் செலுத்தப்படுகிறது. இதனால் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.9 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் GLC AMG 43 Coupe, அதிகபட்சமாக 250கிமீ வேகம் வரை செல்கிறது. 
 

 
 
வழக்கமான GLC Coupe மாடலுடன் ஒப்பிடும்போது, க்ரோம் வேலைப்பாடுகள் மற்றும் AMG பேட்ஜ் உடன்கூடிய டயமன்ட் ரேடியேட்டர் கிரில், ஸ்போர்ட்டியான ஏர் இன்டேக்ஸ், முன்பக்க க்ரோம் ஸ்ப்ளிட்டர், Chrome Plated டெயில் பைப், ஷார்ப்பான லிப் ஸ்பாய்லர், 19 இன்ச் AMG அலாய் வீல்கள், சில்வர் சைடு ஸ்கர்ட், LED DRL - LED டெயில் லைட், Pre-Safe உடனான எலெக்ட்ரிக் சன்ரூஃப், ரெயின் சென்சார் ஆகியவை, காரின் தோற்றத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகும்.
 
சிவப்பு நிற தையல் வேலைப்பாடுகள் - கறுப்பு நிற Nappa லெதர் அப்ஹோல்சரி, கார்பன் ஃபைபர் ஃப்னிஷ், AMG லோகோ உடனான ஃப்ளோர் மேட் - ஸ்போர்ட்ஸ் சீட் - இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சிவப்பு நிற சீட் பெல்ட், பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய 3 ஸ்போக் ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், ரேஸ் டைமர் - ப்ளூடூத் - USB - ஆப்பிள் கார் பிளே - ஆண்ட்ராய்ட் ஆட்டோ போன்ற கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் கூடிய 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 13 ஸ்பீக்கர் மற்றும் 9-Channel DSP Amplifier உடனான Burmester Surround சவுண்ட் சிஸ்டம், டோர் சில் பிளேட், ஸ்போர்ட்ஸ் பெடல், Intelligent லைட்டிங் சிஸ்டம் எனக் கேபினிலும் மாற்றங்கள் தென்படுகின்றன. 
 

 
 
இன்ஜின் - கியர்பாக்ஸ், ஸ்டீயரிங் - சஸ்பென்ஷன் ஆகியவற்றை, தேவைக்கேற்ப செட் செய்துகொள்ளக்கூடிய ஐந்து டிரைவிங் மோடுகள் (Eco, Comfort, Sport, Sport Plus, Individual), மைலேஜை அதிகரிக்கக்கூடிய Cylinder Shut-Off மற்றும் Start-Stop போன்ற தொழில்நுட்பங்கள், அசத்தலான ஹேண்ட்லிங்குக்குக் கைகொடுக்கும் அட்ஜஸ்டபிள் டேம்பர் மற்றும் Ride Height உடனான இன்டிபெண்டன்ட் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன்,  AMG Performance 4Matic ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், AMG பிரேக் காலிப்பர், Low Profile டயர்கள், ஆப்ஷனல் 21 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை, காரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மெக்கானிக்கல் மாற்றங்கள் ஆகும்.
 
வழக்கமான GLC எஸ்யூவியில் இருக்கும் 245bhp இன்ஜினுடன் ஒப்பிடும்போது, இதன் AMG மாடல் 122bhp பவரை அதிகமாக வெளிப்படுத்துகிறது மக்களே! இந்தாண்டு இந்தியாவில் மெர்சிடீஸ் பென்ஸ் வெளியிட்டிருக்கும் 8-வது காரான இது, ஆடி Q7 - பிஎம்டபிள்யூ X5 - வால்வோ XC90 - போர்ஷே மக்கான் - ஜாகுவார் F-Pace ஆகிய எஸ்யூவிகளுடன் போட்டியிடுகிறது.  
 

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   MERCEDES BENZ, INDIA, AMG, GLC, 43, SPORTS COUPE, PERFORMANCE CAR, PETROL, TWIN TURBO ENGINE, PORSCHE MACAN, JAGUAR F-PACE, AUDI Q7, BMW X5, VOLVO XC90, SUV.