3.57 லட்சத்துக்குக் களமிறங்கியது, டட்ஸன் ரெடி-கோ 1.0 லிட்டர்!
Posted Date : 14:59 (29/07/2017)
Last Updated : 15:07 (29/07/2017)


 

ஆல்ட்டோ, இயான் போன்ற என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக்குகளுக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்ட டட்ஸன் நிறுவனத்தின் ரெடி-கோ (800சிசி மாடல்), கடந்தாண்டு மே மாதத்தில் அறிமுகமானது. தற்போது க்விட்டைத் தொடர்ந்து, ரெடி-கோவின் 1.0 லிட்டர் மாடல், 5 கலர் ஆப்ஷன் மற்றும் T (O) & S எனும் இரு வேரியன்ட்களில் வெளிவந்துள்ளது. 3.57 லட்சம் - 3.72 லட்சம் ரூபாய்க்குக் களமிறங்கியிருக்கும் (சென்னை எக்ஸ் ஷோரூம் விலை);
 
இந்த வேரியன்ட்டின் இன்ஜினைத் தாண்டி, காரின் தோற்றம் & மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் முன்பைவிடச் சற்றே பெரிய இன்ஜின் காரணமாக, 800சிசி மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த காரின் எடை 30 கிலோ (மொத்தம் 680 கிலோ)-வாக அதிகரித்திருக்கிறது; இதுதவிர காருக்குள்ளேயும் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
 
 
 
 
முழுக்க கறுப்பு நிறத்துக்குக் கேபின் மாறியிருக்கிறது. கீலெஸ் என்ட்ரி உடனான சென்ட்ரல் லாக்கிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன. க்விட் 1.0 மாடலில் இருக்கும் AMT ஆப்ஷன் இங்கே இல்லையென்பதால், அசத்தலான விலையில் ரெடி-கோ 1.0 வெளிவந்திருக்கிறது எனலாம். இதில் பொருத்தப்பட்டுள்ள 999சிசி, 3 சிலிண்டர், i-SAT பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி,
 
1.0 லிட்டர் க்விட்டைப் போலவே 68bhp பவர் - 9.1kgm டார்க்கையே வெளிப்படுத்துகிறது. ஆனால் அராய் மைலேஜில் (22.5kmpl) மாறுதல் இருக்கிறது. ரெடி-கோ 1.0 லிட்டர் மாடலின் புக்கிங், டட்ஸன் டீலர்களில் ஏற்கனவே துவங்கிவிட்டது (10 ஆயிரம் ரூபாய்); பிடித்தமான கலர் மற்றும் வேரியன்ட்டில், காரை புக் செய்துகொள்ளலாம்!
 
- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   DATSUN, INDIA, REDIGO, RENAULT, KWID, BUDGET HATCHBACK, 1.0, 3 CYLINDER ENGINE, PETROL, AMT, 5 SPEED GEARBOX, ALTO, EON, MARUTI SUZUKI, HYUNDAI, 1 AIRBAG.