14.95 லட்சத்துக்குக் களமிறங்கியது, ஜீப் காம்பஸ்!
Posted Date : 17:07 (31/07/2017)Last updated : 18:07 (31/07/2017)


 

ஆட்டோமொபைல் துறை நிபுணர்களின் லைக்குகளைப் பெற்ற காம்பஸ் எஸ்யூவியை, 14.95 லட்சம் - 20.65 லட்சம் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) விலைக்குக் களமிறக்கியுள்ளது ஜீப். இந்நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே கிராண்ட் செரோக்கி மற்றும் ரேங்க்ளர் என இரு பிரிமியம் எஸ்யூவிகளை விற்பனை செய்கிறது என்றாலும், 178மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்ட இதுதான் அவர்களின் முதல் 'Made in India' தயாரிப்பு! எனவே காம்பஸ் எஸ்யூவியில் இருக்கும் 65 சதவிகித உதிரிபாகங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவைதான்!
 
 
 
 
ஃபியட் க்ரைஸ்லர் நிறுவனத்தின் ரஞ்சன்கவுன் தொழிற்சாலையில் காம்பஸ் தயாரிக்கப்படுகிறது. மேலும் வலதுபக்க ஸ்டீயரிங் அமைப்பு கொண்ட ஜப்பான், தென் ஆப்ரிக்கா, பிரிட்டன் போன்ற உலக சந்தைகளுக்கும், இந்தியாவில் இருந்துதான் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஜீப்பின் இணையதளம் அல்லது 50 டீலர்களில், 50 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி, Sport - Limited - Longitude எனும் 10 வேரியன்ட்கள் - 5 கலர்கள் - 30 ஆக்ஸசரிஸில் வேண்டியதை புக் செய்து கொள்ளலாம்;
 
 
 
 
பெட்ரோல்/டீசல் இன்ஜின், மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 2 வீல் டிரைவ் - 4 வீல் டிரைவ் எனப் பல ஆப்ஷன்களைக் கொண்டிருக்கும் காம்பஸ், மினி கிராண்ட் செரோக்கி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இதுவரை 5,000-க்கும் அதிகமான எண்ணிக்கையில் புக்கிங் மற்றும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான Enquiry-களைப் பெற்றுள்ளதாக ஜீப் கூறியுள்ளது. இந்த எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 173bhp பவர் மற்றும் 35kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.
 
 
 
 
இதில் 2 வீல் டிரைவ் (அராய் மைலேஜ் - 17.1 kmpl) மற்றும் 4 வீல் டிரைவ் (அராய் மைலேஜ் - 16.3 kmpl) ஆப்ஷன்கள் இருப்பது கவனிக்கத்தக்கது. இதனுடன் வழங்கப்பட்டிருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 162bhp பவர் மற்றும் 25kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு DDCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என 2 கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. XUV 5OO, ஹெக்ஸா, டூஸான், டிகுவான் ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் காம்பஸ் எஸ்யூவியில்,
 
 
 
 
ஏபிஎஸ், ISOFIX, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், 6 காற்றுப்பை, டிராக்‌ஷன் கன்ட்ரோல், 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக், EBD, HAC எனப் பாதுகாப்பு வசதிகளின் பட்டியல் நீள்கிறது. டீசலில் 7 ஸ்பீடு DDCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் பின்னர் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Frequency Sensitive Damping உடனான சஸ்பென்ஷன் - Panic Brake Assist உடனான பிரேக்ஸ் - Electronic Rollover Mitigation இருப்பதால், காம்பஸ் எஸ்யூவியின் கையாளுமை அசத்தலாக இருக்கும் எனலாம்.
 
 
 
 
ஜீப்பின் தாய்நிறுவனமான ஃபியட், இந்தியாவில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஜீப் அந்த வரலாற்றை மாற்றி எழுதும் என நம்பலாம். இந்த எஸ்யூவியின் டாப் வேரியன்ட்களில் Active Drive Selec-Terrain (Auto, Snow, Sand, Mud) சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் பிளே - 6 ஸ்பீக்கர் உடனான 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 2 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், LED DRL உடனான Bi-Xenon ஹெட்லைட், LED டெயில் லைட், அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுனர் இருக்கை, 16 இன்ச் அலாய் வீல், பின்பக்க ஏசி வென்ட் போன்ற பல சிறப்பம்சங்கள் இடம்பிடித்துள்ளன. 15 ஆயிரம் கிமீ/1 வருடத்துக்கு ஒருமுறை சர்வீஸ் மற்றும் 3 வருடம்/1 லட்சம் கிமீ வாரன்டியில் கிடைக்கும் ஜீப் காம்பஸின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள் பின்வருமாறு;
 

 
 
1.4 MultiAir பெட்ரோல் Sport - ரூ. 14.95 லட்சம்
1.4 MultiAir பெட்ரோல் Limited (AT) - ரூ. 18.70  லட்சம்
1.4 MultiAir பெட்ரோல் Limited (AT) (O) - ரூ. 19.40 லட்சம்
2.0 Multijet டீசல் Sport - ரூ. 15.45 லட்சம்
2.0 Multijet டீசல் Longitude - ரூ. 16.45 லட்சம்
2.0 Multijet டீசல் Longitude (O) - ரூ. 17.25 லட்சம்
2.0 Multijet டீசல் Limited - ரூ. 18.05 லட்சம்
2.0 Multijet டீசல் Limited (O) - ரூ. 18.75 லட்சம்
2.0 Multijet டீசல் Limited 4x4 - ரூ. 19.95 லட்சம்
2.0 Multijet டீசல் Limited 4x4 (O) - ரூ. 20.65 லட்சம்
 

 - ராகுல் சிவகுரு.