ஃபுல் ஃபேரிங் உடன் வருகிறது, யமஹாவின் Fazer 250 பைக்!
Posted Date : 17:08 (01/08/2017)Last updated : 17:08 (01/08/2017)

 

 

FZ25 பைக்கைத் தொடர்ந்து, அதனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் Fazer 250 பைக்கை, பண்டிகை காலத்தில் அறிமுகப்படுத்த உள்ளது யமஹா. தற்போது டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த பைக்கின் ஸ்பை ஃபோட்டோக்கள், இன்டர்நெட்டில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்த நிலையில், Fazer 250 பைக்கின் தெளிவான படங்கள் வெளிவந்துள்ளன. எப்படி நேக்கட் பைக்கான ஜிக்ஸரில் இருந்து உருவானதுதான், ஃபுல் ஃபேரிங்கைக் கொண்ட ஜிக்ஸர் SF பைக். தற்போது இதே பாணியைப் பின்பற்றி, ஃபுல் பேரிங் உடனான பைக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது Fazer 250.
 
 
 
 
LED ஹெட்லைட்டின் இருபுறமும், LED DRL பொருத்தப்பட்டுள்ளன. அதன் மேலே ஸ்டைலான ஏர் இன்டேக் இருப்பதுடன், ஃபுல் ஃபேரிங்கின் மேலே ரியர் வியூ மிரர்களுக்கான மவுன்ட்டிங் பாயின்ட்கள் உள்ளன. ஆனால் ஜிக்ஸர் SF பைக்குடன் ஒப்பிடும்போது, Fazer 250 பைக்கின் ஃபுல் பேரிங் முழுமையாக இல்லை; டெஸ்ட்டிங்கில் இருந்த பைக்குகள், கறுப்பு நிறத்தில் இருந்தன என்றால், இந்த படத்தில் இருப்பவை, டூயல் டோன் கலர்களில் அசத்துகின்றன. பஜாஜ் பல்ஸர் RS200 பைக்கிற்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ள இந்த பைக்கின் ஃபுல் பேரிங்கைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மீதி எல்லாம் அப்படியே FZ25 பைக்கின் ஜெராக்ஸ்தான்!  
 

- ராகுல் சிவகுரு.