10% கூடுதல் செஸ் - எஸ்யூவி & செடான்களின் விலை உயருகிறது!
Posted Date : 07:08 (10/08/2017)Last updated : 08:08 (10/08/2017)
 
4 மீட்டருக்கும் அதிக நீளத்தில் இருக்கும் எஸ்யூவி மற்றும் செடான்கள் மீது, இதுவரை 43% வரி (28% GST + 15% Cess) விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசாங்கத்தின் பரிந்துரைக்கு ஏற்ப, 53% வரி ( (28% GST + 25% Cess) என மாற்றியமைக்கப்பட உள்ளது. ஆகவே, செஸ் 10% சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு, லக்ஸூரி கார் தயாரிப்பாளர்களான ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
 
 
 
இதன் எதிரொலியாக, 4 மீட்டருக்கும் அதிக நீளத்தில் இருக்கும் எஸ்யூவி மற்றும் செடான்களின் விற்பனை, விலை உயர்வால் சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு, சில நாள்களில் வெளிவரும் எனத் தெரிகிறது. ஜூலை 1, 2017 முதலாக, நாடெங்கும் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரியினால், 4 மீட்டர் நீளத்துக்கு உட்பட்ட ஹேட்ச்பேக், காம்பேக்ட் செடான் மற்றும் எஸ்யூவிகளின் விலைகள் குறைந்தது கவனிக்கத்தக்கது. மேலும், எலெக்ட்ரிக் கார்களின் மீது 12% வரி மட்டுமே விதிக்கப்பட்டாலும், ஹைபிரிட் கார்களின் மீது 43% வரி விதிக்கப்பட்டது அறிந்ததே.
 
 - ராகுல் சிவகுரு.