எப்படி இருக்கிறது யமஹா ஃபேஸர் 25?
Posted Date : 13:18 (28/08/2017)
Last Updated : 13:35 (28/08/2017)


நேக்கட் டிசைனிலிருந்து வளர்ந்தவைதான், ஃபேரிங் உடனான பைக்குகள். இதே கோட்பாட்டைப் பின்பற்றி, பல பைக்குகள் இந்தியாவில் களமிறங்கி இருக்கின்றன. யமஹாவின் FZ-V2 மற்றும் ஃபேஸர் ஆகியவை, இதில் பிரபலமான மாடல்களுள் ஒன்று. எனவே இந்த ஆண்டு துவக்கத்தில் FZ25 வெளிவந்த போது, ஃபேஸர் 25 வருவது உறுதி என பைக் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்கேற்ப 43 கி.மீ அராய் மைலேஜைக் கொடுக்கக்கூடிய ஃபேஸர் 25 பைக்கை,
 
 
 
 
Soulful Cyan மற்றும் Rhythmic Red ஆகிய இரண்டு நிறங்களில், 1.30 லட்சத்துக்குக் (தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை) களமிறக்கி இருக்கிறது யமஹா. இந்த பைக்கின் புக்கிங், கடந்த மாதத்திலேயே தொடங்கிவிட்டதுடன், இந்த மாதத்தில் டெலிவரிகள் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. FZ25 பைக்கைவிட10 ஆயிரம் ரூபாய் அதிக விலையில், 20-30 வயதினரை மனதில் வைத்து வெளிவந்திருக்கும் இந்த பைக்கில் என்ன ஸ்பெஷல்?
 

 
 
150சிசி ஏர்-கூல்டு இன்ஜினைக் கொண்டிருக்கும் ஃபேஸர் Fi, செமி ஃபேரிங்கைக் கொண்டிருப்பது அறிந்ததே. இந்நிலையில் 250சிசி லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொண்டிருக்கும் ஃபேஸர் 25, சுஸுகியின் ஜிக்ஸர் SF பைக்கைப் போல, ரியர் வியூ மிரர்களுடன் கூடிய ஃபுல் ஃபேரிங்கைக் கொண்டிருக்கிறது. டூயல் ஹாரன், Anti-Slip மெட்டீரியலால் ஆன சீட் கவர் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற டெக்னிக்கல் விபரங்களைப் பார்த்தால்,
 
டயமண்ட் டைப் ஃப்ரேம், டெலிஸ்கோபிக் - மோனோஷாக் சஸ்பென்ஷன், 20.9bhp பவர் - 2.0kgm டார்க் ஆகியவற்றை வெளிப்படுத்தும் 249சிசி Blue Core BS-IV இன்ஜின், LCD டிஜிட்டல் மீட்டர், MRF டியூப்லெஸ் டயர்கள், டிஸ்க் பிரேக்ஸ், LED டெயில் லைட், சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார், ஸ்ப்ளிட் சீட், பாடி பேனல்கள், எக்ஸாஸ்ட் பைப், 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் என அப்படியே  FZ25 பைக்கின் ஜெராக்ஸ் ஆக இருக்கிறது ஃபேஸர் 25. இணையத்தில் வைரலாகப் பரவிய ஸ்பை படங்களில் இருந்தது போலவே, AHO உடனான LED ஹெட்லைட்டைட்டின் இருபுறத்திலும், LED DRL உடனான Faux ஏர் இன்டேக் இருக்கின்றன.  
 

 
 
FZ25 பைக்கின் சொகுசான ஓட்டுதலைக் கருத்தில் கொண்டு, அதன் உரிமையாளர்கள் பலர், அதில் டூரிங் செல்ல ஆரம்பித்தனர். ஆனால் நெடுஞ்சாலை வேகத்தில் செல்லும்போது, எதிர்காற்று முகத்தில் அறைவது, நீண்ட நேரப் பயணங்களில் அவ்வளவு வசதியாக இல்லை. இதற்கெல்லாம் சரியான தீர்வாக வெளிவந்திருக்கும் ஃபேஸர் 25 பைக்கின் ஃபுல் பேரிங் காரணமாக, FZ25 பைக்குடன் ஒப்பிடும்போது, ஃபேஸர் 25 பைக்கின் எடை, ஆறு கிலோ அதிகமாக இருக்கிறது. பஜாஜ் பல்ஸர் RS200 பைக்குக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இந்த பைக், அதைவிடக் குறைவான பவரையே வெளிப்படுத்துகிறது.
 
 
 
 
ஆனால் ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கான ஃபேஸர் 25 பைக்கைவிட, ஸ்போர்ட்ஸ் பைக்கான RS200 பைக்கின் எடை, 11 கிலோ அதிகம் என்பதால், பவர் குறைபாடு ஒரு பிரச்னையாக இருக்காது என்றே தெரிகிறது. FZ25 பைக்கைத் தொடர்ந்து, ஃபேஸர் 25 பைக்கிலும் ஏபிஎஸ்ஸை ஆப்ஷனலாகக் கூட யமஹா வழங்காதது அதிர்ச்சியாக இருக்கிறது. மேலும் ஒரு 250சிசி டூரிங் பைக்குக்கு, 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இல்லாததும் நெருடலாகவே இருக்கிறது. ஏனெனில் பஜாஜின் பல்ஸர் RS200 பைக்கின் லிக்விட் கூல்டு இன்ஜின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. தவிர சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 
 
 - ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   YAMAHA, FAZER 25, FULL FAIRING, LED DRL, LED LIGHTING, BAJAJ, PULSAR RS200, ABS, PROJECTOR LIGHTS, DUAL DISCS, DIGITAL METER, PETROL, PERFORMANCE.