ஏபிடிவில்லியர்ஸ் அறிமுகப்படுத்திய MRF Perfinza டயர்களில் என்ன ஸ்பெஷல்?
Posted Date : 19:57 (29/08/2017)
Last Updated : 20:04 (29/08/2017)

 

 

 

 

சொகுசான ஓட்டுதலை முன்னிருத்தி, பிரிமியம் மற்றும் லக்ஸூரி கார்களுக்கு எனப் பிரத்யேகமான Perfinza டயர்களை, MRF நிறுவனத்தின் சர்வதேச பிராண்ட் அம்பாசிடரான ஏபிடில்லியர்ஸ், இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். இந்தியா முழுக்க இருக்கும் இந்நிறுவனத்தின் 6,000 TIRETOK & T&S ஷோரூம்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த டயர்கள், மாருதி சுஸூகியின் பெலினோ தொடங்கி மெர்சிடீஸ் பென்ஸ் S400 வரை எனச் சுமார் 60 மாடல்களுக்குத் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
பின்னர் தேவைக்கு ஏற்ப, Perfinza டயர்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் இருப்பதாக MRF தெரிவித்துள்ளது. லக்ஸூரி செடான் E-க்ளாஸ் காரில் Perfinza டயர்களைப் பொருத்தி, ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்தில் இருக்கும் டெஸ்ட்டிங் சென்டரில், Dry & Wet சூழ்நிலைகளில் பரிசோதனை செய்திருக்கும் MRF, IDIADA மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் ஆகியோரின் ஒப்புதலைப் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. Asymmetric Tread Pattern மற்றும் Silica Based “Green Tyre Technology” Compound ஆகியவற்றைக் கொண்டிருக்கும் Perfinza டயர்களை,
 
 
 
 
அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது. 195/60 R15 முதல் 245/50 R18 வரையிலான பல சைஸ்களில் கிடைக்கும் இந்த டயர்கள், ஆடி - பிஎம்டபிள்யூ - ஜாகுவார் - மெர்சிடீஸ் பென்ஸ் - மினி - வால்வோ போன்ற லக்ஸூரி கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் மாடல்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. மினி கூப்பர் காருக்கான ரன் ஃப்ளாட் டயரை, Perfinza பிராண்டில் MRF வெளியிட்டிருப்பதை, இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். முன்னே சொன்ன லக்ஸூரி கார்களைத் தவிர்த்து,
 
ஃபோக்ஸ்வாகன் - ஸ்கோடா - டொயோட்டா - ஹூண்டாய் - ஹோண்டா - ஃபியட் - ஃபோர்டு - மாருதி சுஸூகி போன்ற நிறுவனங்களின் பிரிமியம் மாடல்களுக்கும் பொருத்தமான டயர்களை, Perfinza பிராண்டில் களமிறக்கியுள்ளது MRF. ''Feel Perfection'' என்ற கோட்பாடுடன் வெளிவந்திருக்கும் Perfinza டயர்களின் R&D பணிகளை, இந்தியா மற்றும் ஜெர்மனியில் மேற்கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றின் விலை, 5,500 ரூபாய் முதல் ஆரம்பமாகின்றன.
 
 - ராகுல் சிவகுரு.
 
  
TAGS :   MRF, PERFINZA, PERFECT, AB DEVILLIERS, INDIA, EXPORT, AUDI, MERCEDES BENZ, JAGUAR, VOLVO, MINI, BMW, LUXURY CARS, PREMIUM MODELS, PETROL, DIESEL, WET, DRY, TYRES, ALL WEATHER, SILICA.