2017 ஹூண்டாய் வெர்னா காரில் என்ன ஸ்பெஷல்?
Posted Date : 13:20 (30/08/2017)
Last Updated : 13:28 (30/08/2017)


ஹோண்டா சிட்டி, மாருதி சுஸூகி சியாஸ், ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் ஆகிய கார்களுக்குப் போட்டியாக, முற்றிலும் புதிய வெர்னா மிட் சைஸ் செடானைக் களமிறக்கி உள்ளது ஹூண்டாய். இது ரஷ்யா (Solaris), கனடா (Accent), சீனா (Verna) ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இறுதியாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது மக்களே! மற்ற ஹூண்டாய் கார்களைப் போலவே, இதுவும் Fuidic Sculpture 2.0 டிசைன் கோட்பாடுகளின் படியே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் ப்ரொஜெக்டர் பனி விளக்குகள், அகலமான க்ரோம் க்ரில், LED டெயில் லைட், 16 இன்ச் டயமன்ட் கட் அலாய் வீல்களுடன், பார்ப்பதற்கு மினி எலான்ட்ரா போன்ற தோற்றத்தில் புதிய வெர்னா அசத்துகிறது.
 
 
 
 
இதனுடன் காரின் அளவுகளிலும் (65 மிமீ கூடுதல் நீளம் - 29மிமீ கூடுதல் அகலம் - 30மிமீ கூடுதல் வீல்பேஸ் - 20 லிட்டர் பூட் ஸ்பேஸ்) மாற்றம் இருப்பதால், முன்பைவிட இடவசதி அதிகரித்திருக்கிறது. மேலும் பின்பக்க ஹெட்ரூம் 948மிமீ எனவும், ஃப்யூல் டேங்க் 45 லிட்டராகவும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. தவிர காரின் டெயில்கேட், பக்கவாட்டு விண்டோ லைன், பனி விளக்கு ஆகிய இடங்களில் செய்யப்பட்டுள்ள க்ரோம் வேலைப்பாடு, ரசனைக்குரியதாக அமைந்திருக்கிறது. புதிய வெர்னாவிற்குள்ளே நுழைந்தால், வெளிப்புறத்தைப் போலவே அதன் கேபினிலும் எலான்ட்ராவின் தாக்கத்தை உணர முடிகிறது. சென்டர் கன்சோல், ஏசி வென்ட்கள், ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றில் சில்வர் ஃப்னிஷ் ஜொலிக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் பிளே - மிரர் லிங்க் உடனான 7 இன்ச் IPS டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், Arkamys சவுண்ட் சிஸ்டத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறது.
 
 
 
 
கூல்டு க்ளோவ் பாக்ஸ், Cluster Ionizer - Eco Coating உடனான கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, சன்ரூஃப், முன்பக்க Ventilated இருக்கைகள், பின்பக்க இருக்கைக்கான Curtain, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள் மற்றும் பின்பக்க இருக்கையின் ஹெட்ரெஸ்ட், ரிவர்ஸ் கேமரா, Electro-chromic மிரர், ரியர் ஏசி வென்ட், இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப், முன்பக்க - பின்பக்க இருக்கைகளுக்கான USB சார்ஜிங் பாயின்ட், Hands Free Smart Trunk என லக்ஸூரி கார்களில் காணப்படும் பல வசதிகளை, வெர்னாவில் சேர்த்துள்ளது ஹூண்டாய். ஸ்டீயரிங் வீலில் வாய்ஸ் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஆடியோ - ப்ளூடுத் கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஸ்டீயரிங் வீலை, இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். 
 

 
 
இன்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, அதே 1.6 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்களே இங்கும் தொடர்கின்றன; என்றாலும் ஹூண்டாய் இவற்றை அதிக பெர்ஃபாமென்ஸுக்காக ரி-டியூன் செய்திருக்கிறது. எனவே பழைய காரைவிடச் சுமார் 5% கூடுதல் மைலேஜை எதிர்பார்க்கலாம். ஆனால் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மாடலில் இருந்த EBD, ESP, ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், Brake Energy Regeneration, Mild Hybrid போன்ற தொழில்நுட்பங்கள், இந்திய மாடலில் இடம்பெறாதது நெடுடல். இரண்டு இன்ஜின்களுக்கும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளது. புதிய வெர்னாவின் கட்டுமானத்தில் 54.5% High Strength ஸ்டீல் மற்றும் Structural Adhesives இடம்பெற்றுள்ளதால், காரின் உறுதித்தன்மை முன்பைவிட 32% அதிகரித்திருக்கிறது.
 
 
 
 
இதனுடன் ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷனும், சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புதிய வெர்னாவின் அனைத்து வேரியன்ட்களிலும் ABS, 2 காற்றுப்பைகள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டிருப்பதுடன், டாப் வேரியன்ட்களில் கூடுதலாக ISOFIX, Impact Sensing டோர் லாக், Cornering வசதியைக் கொண்ட ஹெட்லைட், 6 காற்றுப்பைகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் இருப்பது ப்ளஸ். 2017 ஹூண்டாய் வெர்னாவின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள், ஹோண்டா சிட்டி - ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ - ஸ்கோடா ரேபிட் ஆகியவற்றை விடக் குறைவாக இருந்தாலும், மாருதி சுஸூகி சியாஸை விட அதிகமாக இருக்கிறது!
 
 
 

1.6 லிட்டர், Gamma Dual VTVT, பெட்ரோல் இன்ஜின்: 123bhp பவர் மற்றும் 15.4kgm டார்க்

E MT - ரூ. 7.99 லட்சம்
EX MT - ரூ. 9.06 லட்சம்
SX MT - ரூ. 9.50 லட்சம்
EX AT - ரூ. 10.22 லட்சம்
SX (O) MT - ரூ. 11.09 லட்சம்
SX (O) AT - ரூ. 12.24 லட்சம்

1.6 லிட்டர், U2 CRDi VGT, டீசல் இன்ஜின்: 128bhp பவர் மற்றும் 26.5 kgm டார்க்

E MT - ரூ. 9.20 லட்சம்
EX MT - ரூ. 9.99 லட்சம்
SX MT - ரூ. 11.12 லட்சம்
EX AT - ரூ. 11.40 லட்சம்
SX (O) MT - ரூ. 12.39 லட்சம்
SX (O) AT - ரூ. 12.62 லட்சம்
 
- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   HYUNDAI, VERNA, INDIA, HONDA CITY, MARUTI SUZUKI CIAZ, SKODA RAPID, VOLKSWAGEN VENTO, MID SIZE SEDAN, PETROL, DIESEL, MT, AT, SAFETY, PREMIUM FEATURES.