கார்களின் மீதான CESS, 2 - 7% உயர்வு: GST கவுன்சில் அதிரடி!
Posted Date : 17:09 (14/09/2017)Last updated : 17:09 (14/09/2017)


நீங்கள் புதிதாக எஸ்யூவி, மிட் சைஸ் வாகனம், லக்ஸூரி கார் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்கும் முடிவில் இருக்கிறீர்களா? இவற்றின் விலை தற்போது அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் GST கவுன்சில், இவற்றின் மீதான CESS-ஐ உயர்த்தியுள்ளதே இதற்கான காரணம். இனிமேல் மிட் சைஸ் வாகனங்களுக்கு 45% வரியும் (28% GST + 17 CESS), லக்ஸூரி கார்களுக்கு 48% வரியும் (28% GST + 20 CESS), எஸ்யூவிகளுக்கு 50% வரியும் (28% GST + 22 CESS) விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 4 மீட்டர் நீளத்துக்கு உட்பட்ட கார்களுக்கும் (1200-சிசிக்கும் குறைவான பெட்ரோல் மற்றும் 1500-சிசிக்கும் குறைவான டீசல் இன்ஜின்கள்), ஹைபிரிட் கார்களுக்கும், 13 சீட்களைக் கொண்ட கார்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகளில் மாற்றம் செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.

 

 

முன்னதாக லக்ஸூரி கார்களுக்கும், எஸ்யூவிகளுக்கும் 10% CESS உயர்வு விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், GST கவுன்சிலிடம் இருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டுதான், அதிகபட்சமாக 7% CESS உயர்வு விதிக்கப்பட்டிருக்கிறது. CESS உயர்வால், மாருதி சுஸூகி மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்களுக்கு பாதிப்பு அதிகமில்லை. ஆனால் மெர்சிடீஸ் பென்ஸ் மற்றும் ஆடி போன்ற லக்ஸூரி கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், CESS உயர்வு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, GST-க்கு முந்தைய விலைக்கே, இந்திய ஆட்டோமொபைல் சந்தை திரும்பிவிடும் எனத் தோன்றுகிறது!  

 

- ராகுல் சிவகுரு.