சென்னையில் 10 லட்சம் டூ - வீலர்கள் உற்பத்தி: யமஹா சாதனை!
Posted Date : 13:35 (27/09/2017)
Last Updated : 13:44 (27/09/2017)

 

சென்னையில் உள்ள வல்லம் வடகலில் அமைந்திருக்கும் தனது தொழிற்சாலையில், 2.5 ஆண்டுகளில் 10 லட்சம் டூவீலர்களைத் தயாரித்து சாதனை படைத்திருக்கிறது, ஜப்பானிய நிறுவனமான யமஹா. இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட 8.5 லட்சம் டூவீலர்களும், இங்கு தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 1.5 லட்சம் டூவீலர்களும் அடக்கம். இந்த 10 லட்சம் டூவீலர்களில், யமஹாவின் டாப் செல்லிங் ஸ்கூட்டரான ஃபேஸினோ மட்டும், 3.7 லட்சம் டூவீலர்கள் என்பது கொசுறுத் தகவல்!

 

 

யமஹாவின் சென்னை தொழிற்சாலையில், ஒரே நேரத்தில் பத்து டூவீலர்கள் தயாரிக்கப்படுகிறது என எடுத்துக் கொண்டால், அதில் ஏழு ஸ்கூட்டர்கள் - மூன்று பைக்குகள் என்ற விகிதத்தில் உற்பத்தி அமைந்திருக்கிறது. இந்நிறுவனம் ஏற்றுமதி செய்த 1.5 லட்சம் டூவீலர்களில் ஃபேஸினோ, ரே-ZR, FZ ஆகியவை, அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. வருடத்துக்கு 4.5 லட்சம் டூவீலர்களைத் தயாரிக்கும் வகையில், சென்னையில் 1300 கோடி முதலீட்டில், இந்தத் தொழிற்சாலையை மார்ச் 2015-ல் நிறுவியது யமஹா. தற்போது தனது வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதால். வருடத்துக்கு 9 லட்சம் டூவீலர்கள் என உற்பத்தியை இரட்டிப்பாக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக, அடுத்த ஆண்டில் மேலும் 200 கோடி ரூபாயை இதற்காகச் செலவு செய்ய உள்ளது யமஹா. 

 

- ராகுல் சிவகுரு.

 
 
TAGS :   YAMAHA, FASCINO, RAY-ZR, SALUTO, FZ, EXPORT, DOMESTIC, PRODUCTION, 10 LAKH UNITS, CHENNAI, JAPAN, VALLAM VADAGAL, SCOOTER,BIKE