சேவாக்குக்கு சச்சின் பரிசளித்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்... இந்த பிரிமியம் லக்ஸூரி ஸ்போர்ட்ஸ் செடானில் அப்படி என்ன ஸ்பெஷல்?
Posted Date : 15:36 (30/09/2017)
Last Updated : 15:51 (30/09/2017)


இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரான விரேந்தர் சேவாக், அதிரடி ஆட்டத்துக்குப் பெயர்பெற்றவர். சமீப காலங்களில், கிரிக்கெட் மைதானங்களில் காட்டிய அதிரடியை ட்விட்டரில் காட்டிக் கொண்டிருக்கிறார். லேட்டஸ்ட்டாக, இந்திய அணியின் மற்றோரு முன்னாள் துவக்க ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கருக்கும், பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கும் ட்விட்டரில் ("Thank you @sachin_rt paaji and @bmwindia Grateful for this!") தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். 2003 உலகக்கோப்பை போட்டிகளின் முதல், சேவாக் ஓய்வு பெறும் காலம் வரை, இந்திய அணியின் துவக்க ஜோடியாக களமிறங்கிய இவர்கள்,
 
 
 
 
களத்துக்கு வெளியேயும் சிறந்த நட்புறவைக் கொண்டிருக்கின்றனர். இதன் வெளிப்பாடாக, தற்போது பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் சச்சின், புதிதாக ஒரு 7 சீரிஸ் காரை, சேவாக்கிற்குப் பரிசளித்ததே, இந்த ட்வீட்டிற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. இதற்கு பதில் சொல்லும் விதமாக, (Glad you bought the car of your dreams!! They have been my favourite cars for a number of years. Sheer driving pleasure!! #BMW) என சச்சீனும் ட்வீட்டியுள்ளார். இதற்கு ''தளபதி'' ரஜினி பாணியில், ''நட்புனா என்னனு தெரியுமா? சச்சின்னா என்னன்னு தெரியுமா?'' என உருகியுள்ளார். 

 
7 சீரிஸ் காரில், அப்படி என்ன ஸ்பெஷல்?

பிஎம்டபிள்யூவின் பிரிமியம் லக்ஸூரி ஸ்போர்ட்ஸ் செடான் காரான 7 சீரிஸ், அந்நிறுவனத்தின் (Modular CLAR - Cluster Architecture) பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது. முந்தைய தலைமுறை மாடலைவிட ஷார்ப்பான டிசைனையும், 100 கிலோ குறைவான எடையையும் கொண்டிருக்கும் 7 சீரிஸ், அதிகப்படியான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. Gesture Control, ரிமோட் பார்க் அசிஸ்ட், 3D கிராஃபிக்ஸ் Interface, Heads Up Display (HUD), 16 ஸ்பீக்கர் - 1400 வாட் Bowers & Wilkins ஆடியோ சிஸ்டம், லேசர் ஹெட்லைட், மசாஜ் மற்றும் வென்டிலேஷன் வசதியைக் கொண்டிருக்கும் பின்பக்க இருக்கை, வயர்லெஸ் சார்ஜிங், Sky Lounge ஆகியவற்றை,
 
 
 
 
இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம். இதில் தொழில்நுட்பத்தின் உச்சமாக, காருடன் வழங்கப்பட்டிருக்கும் Display Key Fob-ல் இருக்கும் டச் கமாண்ட் சிஸ்டத்தைப் பயன்படுத்தி, காருக்குள் நுழையாமலேயே பார்க் செய்துகொள்ளும் வசதி இருப்பது பெரிய ப்ளஸ். 3.0 லிட்டர், In-Line 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட 730Ld மாடலின் சென்னை ஆன்-ரோடு விலை, 1.5 கோடியைத் தொடுகிறது. 265bhp பவர் மற்றும் 62kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த கார், 0 - 100கிமீ வேகத்தை வெறும் 6.2 விநாடிகளிலேயே எட்டிவிடக்கூடிய திறனைக் கொண்டிருப்பதுடன், அதிகபட்சமாக 250கிமீ வரை செல்கிறது. 

 
இதற்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ரியாக்‌ஷன் என்ன?

(Welcome to the world of Sheer Driving Pleasure @VirenderSehwag! Have a good ride) என பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம், சேவாக்கை தனது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ஒருவராக மாறியதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. முன்னதாக, சச்சின் டெண்டுல்கரும் ஒரு 7 சீரிஸ் காரை வைத்திருக்கிறார் என்பது கொசுறு தகவல். இந்த பிரீமியம் லக்ஸூரி ஸ்போர்ட்ஸ் செடான் காரின் டாப் வேரியன்ட்டான M760 Li காரின் சென்னை ஆன்ரோடு விலை, 2.8 கோடி ரூபாயைத் தொடுகிறது!
 
 
 
 
இதில் முன்னே சொன்ன வசதிகளுடன், 6.6 லிட்டர் ட்வின் டர்போ12 சிலிண்டர் V12 பெட்ரோல் இன்ஜின் - xDrive ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் அமைப்பைக் கொண்டிருக்கிறது. 4 வீல்களுக்கும், இந்த 12 சிலிண்டர் இன்ஜினின் 601bhp பவர் மற்றும் 80kgm டார்க், சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே 0 - 100கிமீ வேகத்தை, 3.7 விநாடிகளிலேயே ''ஜஸ்ட் லைக் தட்'' கடந்துவிடுகிறது. லக்ஸூரி கார் என்பதால், கேபினிலும் லெதர் - அலுமினியம் - மர வேலைப்பாடுகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. 
 
- ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   BMW, 7 SERIES, 760LI, 730LD, DIESEL, PETROL, TWIN POWER TURBO, SACHIN TENDULKAR, VIRENDER SEHWAG, GIFT, BMW INDIA, TWITTER, TRENDING.