2017 மாருதி சுஸூகி S-க்ராஸ்: 8.49 லட்சத்துக்குக் களமிறங்கிய இந்த காரில் என்ன ஸ்பெஷல்?
Posted Date : 23:52 (02/10/2017)
Last Updated : 23:55 (02/10/2017)


ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர், ஹோண்டா BR-V ஆகிய மிட் சைஸ் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, 8.49 - 11.29 லட்சத்துக்கு (டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை) ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட S-க்ராஸ் காரைக் களமிறக்கியுள்ளது மாருதி சுஸூகி. இந்த காரின் 4 வேரியன்ட்களிலும் 2 காற்றுப்பைகள், ABS, EBD, பின்பக்க இருக்கைக்கான ISOFIX Child Seat Mount போன்ற பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 
 
 
 

S-க்ராஸின் வெளிப்புறத்தில், புதிய க்ரோம் க்ரில்லின் இருபுறமும் LED DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் இடம்பெற்றுள்ளன. க்ரில்லுக்குக் கிழே இருக்கும் பம்பர், க்ரில்லுக்கு மேலே இருக்கும் பானெட் ஆகியவையும் புதிய தோற்றத்தில் அசத்துகின்றன. காரின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் டூயல் டோன் அலாய் வீல்களில், முன்பைவிட அகலமான டயர்கள் (215/60 R16)பொருத்தப்பட்டுள்ளன. இதுவே பின்பக்கம் என்றால், LED டெயில்லைட்தான் ஒரே மாற்றம்.
 
 
 

முந்தைய மாடலில் இருந்த 1.6 லிட்டர் டீசல் இன்ஜின், இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.மேலும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் மற்றோரு டீசல் இன்ஜின் ஆப்ஷனான 1.3 லிட்டர் டீசல் இன்ஜினில், சியாஸ் மற்றும் எர்டிகாவில் இருக்கும் SHVS அமைப்பு (Start-Stop, Brake Energy Regeneration, Integrated Starter Generator Motor)சேர்க்கப்பட்டுள்ளது. 
 
 
 

காரின் வெளிப்புறத்தைப் போலவே, உட்புறத்திலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. Piano Black ஃப்னிஷ் உடனான சென்டர் கன்சோல், க்ரோம் வேலைப்பாடுகள், தொடுவதற்கு மென்மையான ப்ளாஸ்டிக்கால் ஆன டேஷ்போர்டு, லெதர் சுற்றப்பட்ட சென்டர் ஆர்ம் ரெஸ்ட், Apple CarPlay - Android Auto உடனான ஸ்மார்ட் பிளே சிஸ்டம் ஆகியவை, இதற்கான சிறந்த உதாரணங்களாகச் சொல்லலாம். S-க்ராஸின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை பின்வருமாறு;
 

S-Cross Sigma: ரூ. 8.49 லட்சம்
S-Cross Delta: ரூ. 9.39 லட்சம்
S-Cross Zeta: ரூ. 9.98 லட்சம்
S-Cross Alpha: ரூ. 11.29 லட்சம்
 

 - ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   MARUTI SUZUKI, NEXA, INDIA, EX-SHOWROOM, S-CROSS, FACELIFT, SHVS, START STOP, ISG, LED, ISOFIX, DRL, DIESEL, CHROME, LEATHER, HYUNDAI CRETA, RENAULT DUSTER,HONDA BR-V, CROSSOVER