34.49 லட்சத்துக்கு அறிமுகமானது, ஸ்கோடாவின் 7 சீட்டர் கோடியாக் எஸ்யூவி!
Posted Date : 21:04 (04/10/2017)
Last Updated : 21:10 (04/10/2017)

 

 

தனது பெர்ஃபாமென்ஸ் செடான் காரான ஆக்டேவியா RS காரை, கடந்த மாதம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் களமிறக்கிய ஸ்கோடா, இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டொயோட்டா பார்ச்சூனர் - ஃபோர்டு எண்டேவர் - ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, Alaskan கரடியைப் பின்பற்றி பெயரிடப்பட்டிருக்கும் கோடியாக் எனும் லக்ஸூரி எஸ்யூவியை, Style எனும் ஒரே டாப் வேரியன்ட்டில் 34.49 லட்சத்துக்கு (இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஸ்கோடாவின் முதல் 7 சீட் எஸ்யூவியாகவும், விலை அதிகமான காராகவும் பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது.
 
 
 
 
எனவே சூப்பர்ப் செடான் தயாரிக்கப்படும் MQB பிளாட்ஃபார்மில்தான் கோடியாக் எஸ்யூவியும் தயாரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச Euro NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார் ரேட்டிங்கை கோடியாக் எஸ்யூவி பெற்றிருக்கிறது. சந்தை தேவைகளுக்கு ஏற்ப, 180bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன், கோடியாக் பின்னாளில் வெளிவருவதற்கான சாத்தியங்களும் இருக்கிறது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, கோடியாக் மோனோகாக் சேஸியை கொண்டிருந்தாலும், எஸ்யூவிகளுக்கு ஏற்றபடியான நீளம் (4,697மிமீ) - அகலம் (1,882மிமீ) - உயரம் (1,665மிமீ) என MQB பிளாட்ஃபார்ம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 
 
 
 
 
இதனை உறுதிபடுத்தும் விதமாக, இந்த எஸ்யூவியின் 1,791மிமீ வீல்பேஸ் - 188மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் - 300மிமீ ஆழத்தில் செல்லக்கூடிய திறன் அமைந்திருக்கின்றது. ஆல் வீல் டிரைவ் அமைப்பு இருப்பதால், 270 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டிருக்கும் கோடியாக் எஸ்யூவியில் கொஞ்சம் ஆஃப் ரோடிங்கும் செய்யலாம். இதில் 143bhp பவர் - 34kgm டார்க் - 16.25kpl அராய் மைலேஜை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் TDI டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் லேடர் ஃப்ரேம் எஸ்யூவிகளை விட இதன் எடை குறைவு (1.8 டன்) என்பதால், இன்ஜின் பவர் ஒரு பிரச்னையாக இருக்காது என நம்பலாம்.
 
 
 
 
LED ஹெட்லைட் & டெயில் லைட், Hands-Free பார்க்கிங் அசிஸ்ட், ஆப்பிள் கார் பிளே - ஆண்ட்ராய்டு ஆட்டோ - 12 ஸ்பீக்கர்களைக் கொண்ட Canton ஆடியோ சிஸ்டம் உடனான 8 இன்ச் Connect இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காரின் 180 டிகிரி View வழங்கும் 4 கேமராக்கள், பனரோமிக் சன்ரூஃப், ஆட்டோ ஹெட்லைட் & வைப்பர், எலெக்ட்ரிக் டெயில் கேட், Drowsiness Sensor, Magnetised Flashlight, அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய முதல் 2 வரிசை இருக்கைகள், 10 கலரில் இயங்கும் கேபின் ஆம்பியன்ட் லைட்டிங் என, கோடியாக் எஸ்யூவியில் சிறப்பம்சங்களை வாரி இறைத்திருக்கிறது ஸ்கோடா. 
 

 - ராகுல் சிவகுரு.
 
 
 

 

TAGS :   SKODA, KODIAQ, SUV, TOYOTA FORTUNER, VOLKSWAGEN TIGUAN, FORD ENDEAVOUR, MONOCOQUE CHASIS, LADDER FRAME, DSG, MQB, LED, DRL, DIESEL, STYLE, TDI, ALASKAN BEAR.