A5 Sportback - A5 Cabriolet - S5 Sportback கார்களை, சென்னையில் அறிமுகப்படுத்தியது ஆடி!
Posted Date : 21:32 (13/10/2017)
Last Updated : 21:40 (13/10/2017)

 

இந்தியாவில்தான் விற்பனை செய்யும் மாடல்களின் எண்ணிக்கையில், கூடுதலாக 3 கார்களைச் சேர்த்திருக்கிறது ஆடி. A5 Sportback, A5 Cabriolet, S5 Sportback ஆகிய இந்த மாடல்களின் விலை, முறையே 54.02 லட்சம், 67.51 லட்சம், 70.60 லட்சம் (விலைகள் அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை S5 Sportback காராகப் பிரகடனப்படுத்தப்பட்டதுதான், ஸ்போர்ட்ஸ் செடான் காரான R5S Coupe. தவிர A5 காரின் Cabriolet மாடலை, இந்தியாவில் முதன்முறையாக இப்போதுதான் களமிறக்கி இருக்கிறது ஆடி. A5 Sportback மற்றும் A5 Cabriolet ஆகிய 2 கார்களிலும், 190bhp பவர் மற்றும் 40kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் TDI டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் பொருத்தப்பட்டுள்ளது.

 

 

ஆனால் A5 Sportback ஃப்ரன்ட் வீல் டிரைவ் முறையிலும், A5 Cabriolet & S5 Sportback ஆகியவை Quattro ஆல் வீல் டிரைவ் முறையிலும் இயங்குவது கவனிக்கத்தக்கது. எனவே இரண்டு A5 மாடல்களிலும் இருப்பது, ஒரே இன்ஜின்தான் என்றாலும், பவரை வீல்களுக்குச் செலுத்தும் வழியில் வித்தியாசம் இருப்பதால், இவை 0 - 100கிமீ வேகத்தை எட்டக்கூடிய நேரத்திலும் சிறிய வேறுபாடு இருக்கிறது. ஆம், A5 Sportback 7.9 விநாடிகளிலும், A5 Cabriolet 7.8 விநாடிகளிலும் இந்த வேகத்தை எட்டிப்பிடிக்கின்றன! 

 


 
 
முந்தைய தலைமுறை S5 Sportback காரான R5S Coupe-வில், சூப்பர்சார்ஜர் கொண்ட 4.2 லிட்டர் V8 பெட்ரோல் TFSI இன்ஜின் இருந்தது. ஆனால் தற்போது உலகெங்கும் நிலவும் DownSizing டிரெண்டுக்கு ஏற்ப, 3.0 லிட்டர் V6 - டர்போ பெட்ரோல் TFSI இன்ஜினைப் புதிய S5 Sportback காரில் பொருத்தியுள்ளது ஆடி. 354bhp பவர் மற்றும் 50kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின், 8 ஸ்பீடு Tiptronic ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, 1,200சிசி (2 சிலிண்டர்கள்) - 96bhp பவர் குறைவாக இருந்தாலும், கூடுதலாக 7kgm டார்க் கிடைப்பது பெரிய ப்ளஸ்.
 
 
 
 
அதேபோல இந்த கார்களில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் / 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களிலும், மைலேஜை அதிகரிக்கக்கூடிய ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் இருக்கிறது. காருக்குள்ளே நுழைந்தால் 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், Black-Wood / Faux Aluminium ஃப்னிஷ், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான MMI டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், Virtual Cockpit டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 755W திறன்கொண்ட Bang and Olufsen சவுண்ட் சிஸ்டம், சன் ரூஃப் என A4 செடானின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த வருடத்தில் மட்டும், 10 புதிய கார்களை ஆடி அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார்களின் போட்டியாளர்கள் பின்வருமாறு,

A5 Sportback - A4 காரை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது.
A5 Cabriolet - மெர்சிடீஸ் பென்ஸ் C 300 Cabriolet
S5 Sportback - வால்வோ S60 Polestar மற்றும் மெர்சிடீஸ் AMG C 43 Coupe 
 
 
 - ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   AUDI, GERMANY, INDIA, A5, S5, CABRIOLET, SPORTBACK, TFSI, TDI, 6 CYLINDER, 4 CYLINDER, S-TRONIC, TURBO, PETROL, DIESEL, LUXURY CAR.