5.83 லட்சத்தில் களமிறங்கிவிட்டது, டாடா டிகோர் AMT!
Posted Date : 12:08 (04/11/2017)
Last Updated : 20:07 (09/11/2017)


சென்னை, நவம்பர் 2017: டாடா மோட்டார்ஸ் நிறுவனம், எந்தவிதமான ஆர்ப்பாடமும் இல்லாமல், தனது டிகோர் காம்பேக்ட் செடானின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (5 ஸ்பீடு AMT) மாடலை, இந்திய கார் சந்தையில் களமிறக்கி உள்ளது. மேலும் டிகோர் AMT மாடலின் வேரியன்ட்கள், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களையும், இந்த காம்பேக்ட் செடானின் இணைய பக்கத்தில் அப்டேட் செய்துவிட்டது டாடா. இந்த செட்-அப், டியாகோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் AMT மாடலில் இருப்பதுதான்!
 
எனவே 85bhp பவர் மற்றும் 11.4kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் Revotron பெட்ரேல் இன்ஜினுடன்தான், 5 ஸ்பீடு AMT-யுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த AMT வசதியை, டிகோரின் விலை உயர்ந்த வேரியன்ட்களான XTA மற்றும் XZA-வில் வழங்கியுள்ளது டாடா. இந்த இரு வேரியன்ட்களிலும் (XTA, XZA), Eco மற்றும் City டிரைவிங் மோடுகளுடன், கியர்பாக்ஸில் Automatic, Neutral, Reverse, Manual, Sport மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. Creep மோடும் இருப்பதால், சிக்னல்களில் மிகக் குறைவான வேகங்களில் காரைச் செலுத்துவது சுலபமாக இருக்கும் என நம்பலாம்.
 

 
 
XTA வேரியண்டில் ஃபுல் வீல் கவர்களுடன் கூடிய 14 இன்ச் ஸ்டீல் வீல்கள், சாட்டிலைட் நேவிகேஷன் - ஸ்மார்ட்ஃபோன்களுக்கான ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி வசதி - நான்கு ஸ்பீக்கர்களுடன் கூடிய Harman ConnectNext இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடியோ கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், ரியர் பார்க்கிங் சென்ஸார் போன்ற சிறப்பம்சங்கள் இருக்கின்றன. தவிர பயணிகள் பாதுகாப்புக்காக 2 காற்றுப்பைகள், ABS, EBD ஆகியவற்றைக் கொண்டிருக்கும் டிகோர் XTA-வின் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை,
 
5.83 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே 47 ஆயிரம் ரூபாய் கூடுதலாகச் செலவழித்தால் (6.30 லட்ச ரூபாய் - சென்னை எக்ஸ் ஷோரூம் விலை), XZA வேரியன்ட்டை வாங்க முடியும். இதிலும் அதே Harman ConnectNext இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் என்றாலும், நான்கு ஸ்பீக்கர்களுடன் கூடுதலாக 2 ட்வீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 15 இன்ச் டயமன்ட் கட் அலாய் வீல்கள் இருப்பதும் கவனிக்கத்தக்கது. 
 

 
 
மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட டிகோர் உடன் ஒப்பிடும்போது, AMT மாடல்களின் விலை 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளன. டிகோர் AMT காரின் பிரதான போட்டியாளர்களான மாருதி டிசையர் 1.2P VXI AMT (6.74 லட்ச ரூபாய்) மற்றும் 1.2P ZXI AMT (7.43 லட்ச ரூபாய்); ஃபோர்டு ஆஸ்பயர் 1.5P Titanium AT (8.34 லட்ச ரூபாய்); ஹோண்டா அமேஸ் 1.2P S CVT (Op) (7.47 லட்ச ரூபாய்) மற்றும் 1.2P VX CVT (8.32 லட்ச ரூபாய்), ஹூண்டாய் எக்ஸென்ட் 1.2P S AT (7.16 லட்ச ரூபாய்) உடன் ஒப்பிடும்போது, மிகவும் விலை குறைவாகவே இருக்கிறது.
 
(விலைகள் அனைத்துமே சென்னை எக்ஸ் ஷோரூம்)! மேலே சொன்ன அனைத்துமே, 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட காம்பேக்ட் செடான்களாக. இருந்தாலும், அளவுகளில் சற்று வித்தியாசம் இருக்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால், இந்த செக்மென்ட்டின் ராஜாவாக இருக்கும் மாருதி சுஸூகி டிசையருடன் ஒப்பிடும்போது, டிகோர் கொஞ்சம் சிறிய காராகத் தோற்றமளித்தாலும், சுமார் 1.5 லட்ச ரூபாய் சேமிக்கலாம் என்பது ப்ளஸ்.

- ராகுல் சிவகுரு, ரஞ்ஜித் ரூசோ.
 
 
TAGS :   TATA, TIGOR, AMT, 5 SPEED GEARBOX, MARUTI SUZUKI, DZIRE, FORD ASPIRE, HYUNDAI AMAZE, HONDA AMAZE, COMPACT SEDAN, PETROL, AUTOMATIC, SPORTS MODE, MANUAL MODE, ECO, CITY, DRIVING MODES, VALUE FOR MONEY, REVOTRON.