மெர்சிடீஸ் பென்ஸின் AMG ட்வின்ஸ்...CLA 45 AMG Coupe மற்றும் GLA 45 SUV!
Posted Date : 20:17 (09/11/2017)
Last Updated : 20:26 (09/11/2017)

 

சென்னை, நவம்பர் 2017: ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம், தனது 50 வருட AMG-பாரம்பரியத்தைக் கொண்டாடும் விதமாக, இந்தியாவில் மொத்தம் 12 AMG கார்களை 2017-ல் வெளியிடத் திட்டமிட்டிருந்தது தெரிந்ததே. தற்போது தனது AMG வரிசையில் 6-வது மற்றும் 7-வது காராக, CLA 45 AMG 4Matic Coupe மற்றும் GLA 45 4Matic SUV ஆகிய கார்களின் பேஸ்லிஃப்ட் மாடல்களை, மெர்சிடீஸ்-AMG நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 

இந்த இரண்டு பெர்ஃபாமென்ஸ் கார்களுக்கும், எந்தவித போட்டியாளர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் CLA 45 AMG 4Matic Coupe-ன் விலை 75.20 லட்ச ரூபாயாகவும், GLA 45 AMG 4Matic SUV-ன் விலை 77.85 லட்ச ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார்களின் Aero Edition பேஸ்லிஃப்ட் மாடல்களின் விலை, முறையே 77.69 லட்ச ரூபாய் மற்றும் 80.67 லட்ச ரூபாய் என்றளவில் இருக்கிறது. (குறிப்பிட்டிருக்கும் விலைகள் அனைத்தும் இந்தியா எக்ஸ் ஷோரூம்). 


 
மேலே சொன்ன இரு AMG கார்களிலும் இருப்பது, 381bhp பவர் மற்றும் 47.5kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின். 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின், தனது கைவசம் இருக்கும் பவர் மற்றும் டார்க்கை, 4Matic 4 வீல் டிரைவ் சிஸ்டம் வாயிலாக, நான்கு வீல்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கிறது. புதிய Diffuser உடனான முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர், LED ஹெட்லைட், 18 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை, இரண்டு கார்களிலும் செய்யப்பட்டிருக்கும் பொதுவான மாற்றங்கள். CLA 45 AMG 4Matic Coupe-வில் மாற்றியமைக்கப்பட்ட லிப் ஸ்பாய்லர் இருந்தால்,
 
 
 
 
GLA 45 AMG 4Matic SUV-வில் மாற்றியமைக்கப்பட்ட பூட் ஸ்பாய்லர் இருக்கிறது. இதுவே Aero Edition பேஸ்லிஃப்ட் மாடல்கள் என்றால், கதவுகளில் கறுப்பு நிற Decal இருக்கிறது. 10 ஸ்போக் அலாய் வீல்களும் கறுப்பு நிறத்துக்கு மாறியிருக்கின்றன. மேலும் பம்பர்கள், காரின் பக்கவாட்டுப் பகுதி, ரியர் வியூ மிரர்கள் என எல்லாவற்றிலும் மஞ்சள் நிற பட்டை ஒன்று செல்கிறது. கேபினிலும் இது தொடர்வது, பார்க்க ஸ்டைலாக இருக்கிறது. மேலும் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 360 டிகிரி கேமரா ஆகியவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.  

 
 
மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோலன்ட் ஃபோல்கர் பேசும்போது, ‘இந்தியாவில் பெர்ஃபாமென்ஸ் கார் செக்மென்ட், தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே சந்தை வளரும் வேகத்திற்கு இணையாக, கார்களில் புதுமையை புகுத்துவது மிகவும் அவசியம். மெர்சிடீஸ்-AMG யைப் பொறுத்தமட்டில், டிரைவிங் பெர்ஃபாமென்ஸ்தான் எங்களது சிறப்பான கார்களை, மற்ற கார்களில் இருந்து தனிமைபடுத்திக் காட்டுகிறது. அதன் விளைவாகத்தான், இன்றளவும் எங்களது போட்டியாளர்களைத் தோற்கடித்துவிட்டு, பெர்ஃபாமென்ஸ் கார் சந்தையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்க உதவுகிறது.
 
 
 
 
மெர்சிடீஸ் CLA 45 AMG 4Matic Coupe மற்றும் GLA 45 AMG 4Matic SUV ஆகியவை, இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு அங்கமாக இருக்கப்போகும் இளம் தலைமுறையினரின் தேவைகளையும், இந்திய கார் சந்தையில் நிகழும் மாற்றங்களை மனதில் வைத்தும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எங்களின் இந்தப் புதிய கார்கள், இந்தியாவில் AMG-க்கு அதிக ரசிகர்களை ஈட்டித்தரும் என நம்புகிறோம். ஏனெனில், எங்களின் புதிய AMG 45 சீரிஸ் கார்கள் மூலம், வாடிக்கையாளர்களுக்காக மோட்டார் ஸ்போர்ட்ஸ்களில் கிடைக்கக்கூடிய த்ரில்லை, தினசரி பயன்படுத்தக்கூடிய மற்றும் பிராக்டிக்கலான கார்களுக்குள் புகுத்த முடியும் என்பதை நிருபித்துள்ளோம்’ எனக் கூறினார்.
 

 - ராகுல் சிவகுரு, ரஞ்சித் ரூசோ.
 
 
 
TAGS :   MERCEDES AMG, MERCEDES BENZ, CLA 45 AMG 4 MATIC, GLA 45 AMG 4 MATIC, CUV, COUPE, TURBO PETROL ENGINE, 2.0 LITER ENGINE, INDIA, GERMANY, 7 SPEED AUTOMATIC GEARBOX, DUAL CLUCH, 4 WHEEL DRIVE, PERFORMANCE CARS, PETROL, ROLAND FOLGER, AMG.