ரெனோ கேப்ச்சர்... பீ கேர்ஃபுல்! மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் - ஃபர்ஸ்ட் லுக்!
Posted Date : 11:47 (01/12/2017)
Last Updated : 11:56 (01/12/2017)

 
இந்தியாவில் எஸ்யூவி பிரியர்களின் மத்தியில் தனக்கென்று தனி படையையே வைத்திருக்கும் ஸ்கார்ப்பியோவில், மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸ் ஆகியவை குறைகளாகச் சொல்லப்பட்டன. இவை சரிசெய்யப்பட்டதாகச் சொல்லப்படும் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது மஹிந்திரா. 9.94 - 16.23 லட்ச ரூபாயில் (சென்னை எக்ஸ்-ஷோரூம்), 6 வேரியன்ட்களில் வெளிவந்திருக்கும் இந்த Body On Frame எஸ்யூவியின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின், 140bhp@3750rpm பவர் - 32kgm@1500rpm டார்க் தரும் விதத்தில் ரீ-டியூன் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிடக் கூடுதலாக 20bhp பவர் - 40kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின், புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் Borg Warner டர்போ சார்ஜர் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
இதனால் ஆரம்ப கட்ட - மிட் ரேஞ்ச் - டாப் எண்ட் என இன்ஜினின் ஒட்டுமொத்த பெர்ஃபாமென்ஸில் முன்னேற்றம் இருக்கும் என்கிறது மஹிந்திரா. இந்தப் பவர்ஃபுல் டீசல் இன்ஜின், S7 மற்றும் S11 ஆகிய வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. டாப் வேரியன்ட்டான S11-ல், 4 வீல் டிரைவ் ஆப்ஷனலாகக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இதுவே ஆரம்ப வேரியன்ட்டான S3 என்றால், 75bhp பவர் - 20kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் m2Dicr டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மிட் வேரியன்ட்டான S5 & S7-ல், 120bhp பவர் - 28kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் mHawk இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றன. அனைத்து வேரியன்ட்டிலும் மஹிந்திராவின் Micro Hybrid ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் முந்தைய மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட்ட நிலையில், அது ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இல்லாதது நெருடல். 
 

 
 
 
புதிய தோற்றத்தில் முன்பக்க - பின்பக்க பம்பர்கள், ஜீப் காம்பஸ் எஸ்யூவியை நினைவுபடுத்தக்கூடிய Seven Slat க்ரோம் க்ரில் மற்றும் 17 இன்ச் அலாய் வீல்கள், DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட், க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய வட்ட வடிவ பனி விளக்குகள், ரியர் வியூ மிரர்களில் இண்டிகேட்டர் லைட், சிவப்பு நிற LED டெயில் லைட், புதிய டெயில் கேட் - பின்பக்க வைப்பர் - ஸ்பாய்லர் என வெளிப்புறத்தில் கணிசமான மாறுதல்களைப் பெற்றிருக்கிறது ஸ்கார்ப்பியோ. உட்புறத்தில் புதிய Faux லெதர் சீட்கள், ஸ்டீயரிங் மற்றும் கியர் லீவரில் Faux லெதர் வேலைப்பாடு, ரியர் பார்க்கிங் கேமரா - சாட்டிலைட் நேவிகேஷன் - BlueSense உடன் கூடிய 6 இன்ச் டச் ஸ்க்ரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தண்ணீர் பாட்டில் - மொபைல் ஃபோன் - சன் க்ளாஸ் வைப்பதற்கான ஸ்டோரேஜ் ஸ்பேஸ், ஆட்டோ  Roll-Up பவர் விண்டோ எனக் கேபினில் புதிய அம்சங்கள் எட்டிப்பார்க்கின்றன.
 
 
 
 
ஆனால் இதன் ஃபிட் அண்டு ஃப்னிஷ் மற்றும் பிளாஸ்டிக் தரத்தில் மாற்றம் இல்லாதது மைனஸ். மேலும் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற லேட்டஸ்ட் கனெக்ட்டிவிட்டி வசதிகளும் இல்லை. க்ரூஸ் கன்ட்ரோல், டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் Rain Sensing வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், Speed Alert, ஆட்டோமேட்டிக் Door Lock, டிஜிட்டல் இன்ஜின் Immobilizer எனச் சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளில் மாற்றமில்லை. கூடுதல் பவர் மற்றும் டார்க்கைச் சமாளிக்கும் விதமாக, ஸ்கார்ப்பியோவின் பிரேக் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பை மேம்படுத்தி இருக்கிறது மஹிந்திரா. தவிர இந்த இன்ஜினின் NVH அளவிலும் இந்நிறுவனம் முன்னேற்றி இருப்பதாகத் தெரிகிறது. 2017 மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் சென்னை ஆன்-ரோடு விலைகள் பின்வருமாறு,
 

 
 
2WD S3 75bhp - 11.77 லட்ச ரூபாய்
2WD S5 120bhp - 14.58 லட்ச ரூபாய்
2WD S7 120bhp - 15.77 லட்ச ரூபாய்
2WD S7 140bhp - 16.13 லட்ச ரூபாய்
2WD S11 140bhp - 18.43 லட்ச ரூபாய்
4WD S11 140bhp - 19.94 லட்ச ரூபாய்  
 

- ராகுல் சிவகுரு, ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   MAHINDRA, SCORPIO, SUV, INDIA, DIESEL, MHAWK, M2DICR, 6 SPEED GEARBOX, AUTOMATIC, LED, ABS, 2 AIRBAGS, SAFETY, FACELIFT, RENAULT CAPTUR, HYUNDAI CRETA, TATA SAFARI STORME.