MIT நடத்தும் தொழில்நுட்ப கருத்தரங்கு - AUTOMEET 2018
Posted Date : 17:34 (30/12/2017)
Last Updated : 17:41 (30/12/2017)

 

ஆட்டோ மீட் (AutoMeet)... பெயருக்கு ஏற்ப, ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் இருப்பவர்கள் ஒரே இடத்தில் சங்கமித்து, தங்களின் திறனைப் பரிசோதித்துப் பார்க்கக்கூடிய களம்தான் இது! வருடத்துக்கு ஒருமுறை Madras Institute of Technology கல்லூரியின் ஆட்டோமொபைல் துறையால் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் (Symposium) பல்வேறு வொர்க்-ஷாப்கள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுவதால், இதில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற ஆட்டோ மீட்டில், 1000-க்கும் அதிகமானோர் வொர்க் ஷாப்புக்கு முன்பதிவு செய்திருந்ததுடன்,
 
 
 
 
அதில் IC இன்ஜின் வொர்க் ஷாப்புக்கு மட்டும் 400 பேர் முன்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் எப்போதும் போலவே, 2 நாட்கள் நடத்தப்பட்ட ஆட்டோ மீட்டில், 2500-க்கும் அதிகமான மாணவர்கள், 5 வொர்க் ஷாப் மற்றும் 10-க்கும் அதிகமான போட்டிகளில் கலந்துகொண்டனர். ஆட்டோமொபைல் துறையின் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் குறித்து நடத்தப்பட்ட வொர்க் ஷாப்பில், ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். இந்த இரு நாட்களில் நடத்தப்படும் வொர்க் ஷாப் மற்றும் இதர போட்டிகள் தவிர, பைக் ஸ்டன்ட் ஷோ மற்றும் ஆட்டோ எக்ஸ்போ பிரசித்தம். 
 

 
 
கடந்த ஆண்டின் ஆட்டோ எக்ஸ்போவில் சூப்பர் பைக்ஸ், பிஎம்டபிள்யூ - மெர்சிடீஸ் பென்ஸ் - வால்வோ போன்ற லக்ஸூரி கார்களுடன், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சிறப்பு பங்கேற்பாளராக இருந்ததை இங்கே சொல்லியாக வேண்டும். 2018 ஆட்டோமீட்டைப் பொறுத்தமட்டில், கடந்த முறையைவிட அதிக எண்ணிக்கையிலான லக்ஸூரி கார்கள் (ஆடி - பிஎம்டபிள்யூ - மெர்சிடீஸ் பென்ஸ் - லெக்ஸஸ் - டொயோட்டா) ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட உள்ளது. அதில் சூப்பர் பைக்ஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுடன், லம்போர்கினி சூப்பர் கார்தான் சிறப்பு பங்கேற்பாளராக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
மேலும் 3,500-க்கும் அதிகமான மாணவர்கள், 2018 ஆட்டோ மீட்டில் பங்குபெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்களுக்காக, 5 லட்சத்துக்கும் அதிகமான பரிசுத்தொகை காத்துக்கொண்டிருக்கிறது! https://www.facebook.com/automeet/ என்பதுதான், ஆட்டோ மீட்டின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம். இதில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்டோ மீட்டின் படங்களுடன், 2018 ஆட்டோ மீட் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருக்கும். 5,6 ஜனவரி 2018 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் 2018 ஆட்டோ மீட் குறித்த தகவல்களுக்கு, ஆட்டோ மீட்டின் சேர்மன் Tabark Ulla.B: +91 90436 90719 மற்றும் Santhosh.L.S: +91 86951 77144 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். 
 
 
 

 - ராகுல் சிவகுரு.
 
 

 

TAGS :   MIT, MADRAS INSTITUTE OF TECHNOLOGY, INDIA, CHENNAI, TAMILNADU, ANNA UNIVERSITY, SYMPOSIUM, AUTO MEET, 2017, 2018, WORKSHOP, COMPETITION, IC ENGINE DISMANDLING, ENGINEEREING STUDENTS, AUTOMOBILE ENGINEERING.